உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தற்போது டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதனால் காசு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பல வீரர்களும் தங்களது நாட்டு கிரிக்கெட் அணியை விட்டு இதுபோன்ற லீக் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தான் வீரர்களும் பல நாடுகளுக்கு சென்று டி20 தொடர்கள் விளையாடுகின்றனர்.
இதனால் பாகிஸ்தான் அணியின் தரம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தை நான்கு மடங்கு உயர்த்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முன் வந்துள்ளது. அதன்படி இனி ஆண்டு ஊதியத்திற்கு பதிலாக மாதம் சம்பளம் வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணி ஊதியத்தில் முதல் பிரிவில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி ஆகியோருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் 13 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பெற முடியும்.
இதேபோன்று டி பிரிவில் இருக்கும் என் வீரர்களுக்கு மாதம் 8 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்கள் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை பெற முடியும். இதேபோன்று சி மற்றும் டி பிரிவில் இருக்கும் வீரர்களுக்கு மாதம் இந்திய ரூபாய் மதிப்பில் நாலு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இது ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் ஆகும். ஊதியம் பல மடங்கு உயர்த்தப்பட்டாலும் இது இந்திய வீரர்கள் வாங்கும் சம்பளத்தை விட மிகவும் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி போன்ற வீரர்களுக்கெல்லாம் வருடம் 7 கோடி ரூபாய் வழங்கப்படும் நிலையில் பாபர் அசாம்க்கு ஒன்றரை கோடி ரூபாய் தான் கிடைக்கிறது. இது இந்தியாவில் உள்ள கீழ்மட்ட வீரர்கள் வாங்கும் தொகையாகும்.