- Advertisement -
Homeவிளையாட்டு23 வருடங்களுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான் வீரர்களின் சம்பளம் இது தான். அப்போவே இந்திய வீரர்கள்...

23 வருடங்களுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான் வீரர்களின் சம்பளம் இது தான். அப்போவே இந்திய வீரர்கள் இவ்ளோ சம்பளம் வாங்கினாங்க – போட்டுடைத்த பிரபல வீரர்

- Advertisement-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக், தேசிய அணியில் தான் விளையாடிய காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பெற்ற சம்பளம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், லீக் மற்றும் தேசிய அணியில் தனது வருமானம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார், அவர் பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விளையாடிய போது போதுமான அளவு சம்பாதித்ததாக அதில் கூறியுள்ளார்

32 டி20, 265 ஒருநாள் மற்றும் 46 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக விளையாடிய பிறகு ஓய்வை அறிவித்த ரசாக் இப்போது கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 2009 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் அங்கமாக ரசாக் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அணியில் வீரர்களின் ஊதியம் குறித்து அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியபோது, ​​ரசாக் தான் 1996 இல் அறிமுகமானபோது, ​​ஒருநாள் போட்டிகள் அதிகமாக விளையாடப்பட்டதாகக் கூறியுள்ளார். 1999 வாக்கில், வீரர்கள் ஒரு போட்டிக்கு 10,000 ரூபாய் சம்பளமாகப் பெற்றனர் என்று கூறினார்.

மேலும்  அவர் “2000 ஆம் ஆண்டில் இந்தத் தொகை ரூ.250,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியாவில் நடந்த முதல் தர கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகையில், அந்த நேரத்தில் இந்திய வீரர்கள் ஒரு போட்டிக்கு சுமார் ரூ.100,000 அல்லது ரூ.150,000 சம்பாதித்ததாகவும், அதே சமயம் பாகிஸ்தானியர்கள் சர்வதேச போட்டிகளுக்காக வீரர்கள் பெற்றது வெறும் 10,000 ரூபாய் மட்டுமே.” என தெரிவித்துள்ளார்.

- Advertisement-

மேலும் “அப்போதெல்லாம் அணிகள் ஆண்டுதோறும் சராசரியாக 30 முதல் 35 ODIகள் மற்றும் 9 முதல் 10 டெஸ்ட் போட்டிகள் வரை விளையாடியது, அதனால் வீரர்களின் வருமானம் அனைத்தும் பாகிஸ்தான் அணியிலிருந்து வந்தது. வீரர்களாக நாங்கள் மரியாதையையும் பெற்றோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “2001ஆம் ஆண்டுக்கு முன்னர் மத்திய ஒப்பந்த முறை எதுவும் நடைமுறையில் இல்லை . இருப்பினும், வீரர்கள் கிரிக்கெட்டை விளையாடி மகிழ்ந்தனர் மற்றும் நல்ல சராசரியைக் கொண்டிருந்தனர். 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறும் நேரத்தில், வீரர்கள் ஒருநாள் போட்டிகளுக்கு சுமார் ரூ.5,00,000 முதல் ரூ.6,00,000 வரையிலும், டெஸ்ட் போட்டிகளுக்கு 10 லட்ச ரூபாய் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரூ.300,000 அல்லது 3,50,000 சம்பாதித்தனர். இந்த தொகை இப்போது இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார்.

சற்று முன்