- Advertisement -
Homeவிளையாட்டுWTC Final 2023: அம்பயர்களோட கண்ணு என்ன குருடாகிடுச்சா? ஆஸி வீரர்கள் தெளிவா பிராடு வேலை...

WTC Final 2023: அம்பயர்களோட கண்ணு என்ன குருடாகிடுச்சா? ஆஸி வீரர்கள் தெளிவா பிராடு வேலை பன்றாங்க. எல்லாம் கடவுளுக்கு தான் வெளிச்சம் – கடுமையாக சாடிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

- Advertisement-

நடந்து வரும் WTC இறுதிப் போட்டியில் மூன்று நாட்கள் ஆட்டம் முடிந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது. இந்த போட்டி தற்போது வரை யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாகலாம் என்றே நிலையிலேயே உள்ளது. ஆனால் இன்றைய நாள் முடிவில் ஓரளவிற்கு அனைத்தும் நிச்சயமாகும்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மிக விரைவாக ஆஸி பவுலர்கள் தட்டித் தூக்கினார்கள். இது இந்திய அணிக்கு பின்னடைவானாலும் பின் வரிசை வீரர்களான ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் அரைசதம் இந்திய அணியை பாலோ ஆன் தவிர்க்க உதவியது.

இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீர்ர பாஸித் அலி, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பவுலர்கள் பால் டேம்பரிங் செய்ததாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி பேசியுள்ள அவர் “முதலாவதாக, வர்ணனை பெட்டியிலிருந்து போட்டியைப் பார்ப்பவர்களுக்கும் நடுவர்களுக்கும் நான் கைதட்டுவேன். ஆஸ்திரேலியா தெளிவாக பந்துடன் விளையாடியது (பால் டேம்பரிங்), அதைப் பற்றி யாரும் பேசவில்லை. எந்த பேட்ஸ்மேனும் ‘என்ன நடக்கிறது?’ என யோசிக்கவில்லை. பந்தை அடிக்காமல் பேட்டை விலக்கும் போதும் விக்கெட் விழுவது ஒரு மிகப்பெரிய உதாரணம்.

- Advertisement-

உங்களுக்கு நான் மேலும் ஆதாரம் தருகிறேன். ஷமி 54வது ஓவர் வீசும் வரை பந்து வெளியில் பளபளப்பாக இருந்தது, பந்து மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்தை நோக்கி நகர்ந்தது. இதை ரிவர்ஸ் ஸ்விங் என்று சொல்வதில்லை. உள்புறத்தில் ஷைன் இருந்து  பந்து உள்ளே வந்தால்தான் ரிவர்ஸ் ஸ்விங்.

இதையும் படிக்கலாமே: பதிரனாவுக்கும் தமிழ் சீரியல் நடிகைக்கும் காதலா? நடிகை வெளியிட்ட பதிவு. கப் சிப் ஆன நெட்டிசன்கள்.

16, 17, 18வது ஓவர்களைப் பாருங்கள்.. விராட் கோலி அவுட் ஆன பந்தைப் பாருங்கள்… பளபளப்பைப் பாருங்கள். மிட்செல் ஸ்டார்க் பந்தின் பளபளப்பான முனை வெளியே தெரியும்படி வைத்திருந்தார். ஆனால் பந்து வேறு வழியில் நகர்ந்தது. ஜடேஜா பந்தை ஆன்-சைடில் அடிக்கும் போது பந்து பாயின்ட் திசையில் பறந்து கொண்டிருந்தது. நடுவர்களின் கண்கள் குருடாகிவிட்டனவா? இவ்வளவு எளிமையான ஒன்றைப் பார்க்க முடியாத அனைவரும் அங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்.” என்று அவர் மேலும் கூறினார்.

சற்று முன்