- Advertisement -
Homeவிளையாட்டுஇந்தியா தோத்ததுக்கு என்ன ஏண்டா இப்படி தாலிக்கறிங்க. நான் நெனச்சது சரி தான். பாக்கிஸ்தான் ரசிகர்கள்...

இந்தியா தோத்ததுக்கு என்ன ஏண்டா இப்படி தாலிக்கறிங்க. நான் நெனச்சது சரி தான். பாக்கிஸ்தான் ரசிகர்கள் செய்த வேலையால் ட்விட்டரில் குமுறிய இர்பான் பதான்

- Advertisement-

நேற்றோடு முடிந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்துள்ளது. இது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறையும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று அங்கு நியுசிலாந்து அணியிடம் போட்டியைத் தோற்றது. இது போல கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி நடத்தும் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்திய அணியைக் குறிப்பாக, அதன் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை நோக்கிக் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல முன்னாள் வீரர்கள் இந்திய அணி இந்த டெஸ்ட்டில் செய்த தவறு குறித்து கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் சில பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானின் ட்விட்டர் பக்கத்தில் குழுமி பல மகிழ்ச்சியான ட்வீட்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலர் கேவலமாக திட்டும் சில பதிவுகளையும் பகிர்ந்திருந்தனர்.

- Advertisement-

இது சம்மந்தமாக இர்ஃபான் பதான் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “திடீரென அனைத்து அண்டைநாட்டுக் காரர்களும் (பாகிஸ்தானியர்களைக் குறிப்பிட்டு) என்னுடைய டைம்லைனுக்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஏனென்றால் இந்தியா பைனலை தோற்றுள்ளது. அதனால் நான் அவர்களை பற்றி நினைத்திருந்தது சரிதான்” என கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: தோத்ததுக்கு பிறகும் கம்மின்சிடம் மொக்கை வாங்கிய ரோகித்.

இர்ஃபான் பதான், 2020 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இப்போது தனது துல்லியமான கருத்துகளை சமூகவலைதளங்கள் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார். மேலும் கிரிக்கெட் குறித்து வர்ணனையும் செய்து வருகிறார். இந்நிலையில் அவரின் பல கருத்துகள் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியானதாக இல்லை என்பதால் இப்போது அவரின் டைம்லைனில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்