- Advertisement -
Homeவிளையாட்டுதமிழக கிரிக்கெட் வீரரை காதலித்த பாகிஸ்தான் பெண்கள்..! போன இடத்திற்கு எல்லாம் பெண்கள் கூட்டம்

தமிழக கிரிக்கெட் வீரரை காதலித்த பாகிஸ்தான் பெண்கள்..! போன இடத்திற்கு எல்லாம் பெண்கள் கூட்டம்

- Advertisement-

பங்காளி சண்டை காரணமாக தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஆனால் ஒரு காலத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு சென்று பல போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இப்படி 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் பல வீரர்கள் பின்னால் பாகிஸ்தான் பெண்கள் சுற்றிய கதைதான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.

அதில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு தமிழக வீரர் பின்னால் பாகிஸ்தான் பெண்கள் பைத்தியம் பிடித்தார் போல் சுற்றினார்கள்.அது வேறு யாருமில்லை, நமது கருப்பு தங்கம் பாலாஜி தான். வேகபந்துவீச்சாளரான பாலாஜி அப்போது இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

அப்போது பாலாஜி சென்றபோதெல்லாம் பாகிஸ்தானில் அவருக்கு என தனி ரசிகர்கள் இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறார். பாலாஜி ஒரு முறை இந்திய அணி வீரர்களுடன் சென்றபோது அங்கிருந்த பெண்கள் பாலாஜி பாலாஜி என்று கத்தி கூச்சலிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement-

இதனைப் பார்த்து பாலாஜியெர் வெட்கப்பட்டு மற்ற வீரர்களுக்கு பின்னால் மறைந்து கொண்டிருக்கிறார். பாலாஜி விளையாடும் போதெல்லாம் பாகிஸ்தான் பெண்கள் மைதானத்தில் அவருக்காக உற்சாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இதேபோன்று பாலாஜி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவமாக பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பர்வேஷ் முஸ்ரப் அளித்த விருந்து ஒன்றில் பாலாஜியை அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார். தாங்கள் கிரிக்கெட் போட்டியில் உங்கள் நாட்டுக்காக விளையாடும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

நீங்கள் ஒரு போர்வீரர் போல் உங்கள் நாட்டுக்காக விளையாடி வருகிறீர்கள் என்று பாலாஜியை பார்த்து முஷ்ரப் பாராட்டி இருக்கிறார். பாகிஸ்தானில் புகழை பாலாஜி சந்தித்து இருந்தாலும் நமது சென்னை மக்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடியது இல்லை என்ற வருத்தமும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் இந்திய அணி மேலாளராக இருந்த அம்ரித் என்பவரின் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.

சற்று முன்