- Advertisement 3-
Homeவிளையாட்டுPAK vs SL: கடைசி நேரத்தில் விலகிய நட்சத்திர வீரர்.. தவிப்பில் பாகிஸ்தான் அணி.. பைனலுக்கு...

PAK vs SL: கடைசி நேரத்தில் விலகிய நட்சத்திர வீரர்.. தவிப்பில் பாகிஸ்தான் அணி.. பைனலுக்கு முன்பே இப்படி ஒரு சோதனையா..

- Advertisement-

ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று விளையாட உள்ளன. முன்னதாக இந்த இரு அணிகளும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தன. அதேபோல் இரு அணிகள் வங்கதேச அணியை வீழ்த்தியுள்ளன. இதனால் இந்தப் போட்டியில் யார் வெல்கிறார்களோ அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தரப்பில் 18 மணி நேரத்திற்கு முன்பாகவே பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஃபக்கர் ஜமான், ஆகா சல்மான், நசீம் ஷ, ஹாரிஸ் ராஃப், ஃபஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வியால் 5 பேரை ஒட்டுமொத்தமாக நீக்கியுள்ளது பாகிஸ்தான் அணி.

- Advertisements -

அவர்களுக்கு பதிலாக முகமது ஹாரிஸ், சாவுத் சக்கீல், முகமது வாசிம், ஜமான் கான், முகமது நவாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழலுக்கு சாதகமான பிட்ச் என்பதால், கூடுதலாக 2 சுழற்பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான நசீம் ஷா காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

இந்த ஆசியக் கோப்பை தொடரில் ஷாகின் அப்ரிடியின் தாக்கத்தால், நசீம் ஷா பற்றிய பேச்சுகள் பெரியளவுக்கு இல்லை. ஆனால் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் அதிகளவு சோதனையை கொடுத்தது நசீம் ஷா தான். லைன் மற்றும் லெந்தில் நசீம் ஷா கொடுத்த வேறுபாடுகளை ரோகித் சர்மாவையே ஒரு நிமிடம் ஆட்டி பார்த்தது.

- Advertisement-

இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது பவுண்டரியை தடுக்க முயன்ற நசீம் ஷா, தோள்பட்டையில் காயமடைந்தார். அதன்பின்னர் பந்துவீசினாலும், பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. இவரும் ஹாரிஸ் ராஃபும் களமிறங்காததால், 8 விக்கெட்டுகளோடு பாகிஸ்தான் அணி ஆட்டம் முடிவடைந்தது.

இந்த நிலையில் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் இருவருமே விலகியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக ஜமான் கான் மற்றும் முகமது வாசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகக்கோப்பையை மனதில் வைத்து நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்