- Advertisement -
Homeவிளையாட்டுவரலாற்றில் முதல் முறை... பாக்கிஸ்தானுக்கு நேர்ந்த பின்னடைவு.. சாதித்து காட்டிய ஆப்கானிஸ்தான்

வரலாற்றில் முதல் முறை… பாக்கிஸ்தானுக்கு நேர்ந்த பின்னடைவு.. சாதித்து காட்டிய ஆப்கானிஸ்தான்

- Advertisement-

உலகக்கோப்பை தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது.

இதன்பின் பாகிஸ்தான் அணியின் அப்துல்லா சஃபிக் – இமாம் உல் ஹக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதன்பின் வந்த பாபர் அசாம் – சஃபிக் கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிறப்பாக ஆடிய அப்துல்லா சஃபிக் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆனால் நம்பிக்கையுடன் ஆடிய பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் இஃப்திகார் அஹ்மத் அதிரடியாக 40 ரன்கள் சேர்த்ததால், பாகிஸ்தான் அனி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் – இப்ராஹிம் கூட்டணி தொடக்கம் முதலே அட்டாக்கிங் கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியை விளாசிய குர்பாஸ் பாகிஸ்தான் பவுலர்களை பொளந்து கட்டினார். இதனால் 38 பந்துகளிலேயே குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

- Advertisement-

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்த நிலையில் குர்பாஸ் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இப்ராஹிம் அரைசதம் கடந்தும் பொறுப்பை உணர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் இணைந்து ரஹ்மத் ஷாவும் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். தொடர்ந்து சதம் அடிப்பார் என்று பார்க்கப்பட்ட இப்ராஹிம் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரஹ்மத் ஷா – கேப்டன் ஷாகிதி இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். இவர்களை வீழ்த்த பாகிஸ்தான் பவுலர்கள் முயற்சித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இறுதியாக 49 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி பவுண்டரி விளாசி வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை ஆஃப்கானிஸ்தான் முதல்முறையாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்