- Advertisement -
Homeவிளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ வைக்கும் செக். கடைசியில் எதுவுமே இல்லாமால் நட்டாற்றில் நிற்கப்போகிறதா பாகிஸ்தான்...

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ வைக்கும் செக். கடைசியில் எதுவுமே இல்லாமால் நட்டாற்றில் நிற்கப்போகிறதா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்? நடுவில் இலங்கைக்கு ஒரு சூப்பர் ஆப்பர்

- Advertisement-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணிகள் இருநாட்டு அரசியல் சூழல் காரணமாக இரு நாட்டு தொடர்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. கடைசியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியா வந்து ஒருநாள் தொடரில் விளையாடி சென்றதே கடைசி தொடராகும். ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை உள்ளிட்ட பொதுவான தொடர்களில் மட்டுமே இந்த அணிகள் விளையாடுகின்றன.

இதனால் இரு அணிகளும் மோதும் போட்டியைக் காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை டி 20 தொடரில் இந்த போட்டியைக் காணவே அதிகளவு ரசிகர் கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்க இருந்தது. ஆனால் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என பிசிசிஐ உறுதியாக உள்ளது. அதற்கு பதிலாக தொடரை இலங்கையில் நடத்துமாறும் வலியுறுத்துகிறது. அதை மறுத்துள்ள பாகிஸ்தான், வேண்டுமானால் போட்டிகளை புதிய ஹைபிரிட் மாடல் முறையில் நடத்தலாம் என்கிறது.

பாகிஸ்தான் கூறும் ஹைபிரிட் மாடல் என்றால் என்ன?
போட்டிகளை இரண்டு பாகங்களாக பிரித்து நடத்தவுது தான் இந்த ஹைபிரிட் மாடல். முதல் பாதியில் பாக்கிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபால் அணிகளுக்கு இடையேயான போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவது. இரண்டாவது பாதியில் இந்தியா சம்மந்தமான போட்டிகளை இலங்கை போன்ற ஏதவது ஒரு பொதுவான நாட்டில் நடத்துவது. ஒருவேளை இந்தியா பைனலில் குவாலிபை ஆகவில்லை என்றாலும் பொதுவான நாட்டிலேயே அதை நடத்துவது. இது தான் பாக்கிஸ்தான் கூறும் ஹைபிரிட் மாடல். ACC இதற்க்கு சம்மதித்தால், போட்டிகள் குறித்த அட்டவணை ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும்.

- Advertisement-

பாக்கிஸ்தானில் நடக்க வாய்ப்பே இல்லை:
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இன்சைடு ஸ்போர்ட்ஸ், பாக்கிஸ்தான் ஆசியக் கோப்பை தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லை. இலங்கையில் போட்டிகளை நடத்துவது குறித்த தங்கள் விருப்பத்தை பிசிசிஐ ICC இடம் கொண்டு செல்ல இருப்பதாகவும், இலங்கையில் தான் ஆசியக் கோப்பை தொடர் நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதற்காகவும், ஆனால் இறுதி முடிவு ACC மீட்டிங்கில் தான் எடுக்கப்படும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: இந்த சிஎஸ்கே வீரர் உலகக்கோப்பை அணியில் இல்லாமல் போனதற்கு காரணம் கோலியும், ரவி சாஸ்திரியும் தான். இது அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு – அனில் கும்ப்ளே சாடல்

அதே சமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களின் ஹைபிரிட் மாடலுக்கு பிசிசிஐ ஒத்துவரவில்லை என்றால் ஆசியக் கோப்பையில் இருந்து விலகலாம் என தெரிகிறது. அதே போல ஐசிசி மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இருக்கும் நல்ல உறவின் மூலம் பாகிஸ்தானின் திட்டத்தை தகர்த்து இலங்கையில் இந்த தொடரை நடத்த ஐசிசி விரும்புக்குவதாக கூறப்படுகிறது. எனினும் அடுத்த ACC மீட்டிங்கில் அனைத்து கேள்விகளுக்கும் விடைகிடைக்கும் என இன்சைடு ஸ்போர்ட்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சற்று முன்