- Advertisement -
Homeவிளையாட்டு30 மாதங்களாக சொந்த மண்ணில் பாகிஸ்தானால் முடியாத விஷயம்.. தலைகுனிந்த பிரபலங்கள்..

30 மாதங்களாக சொந்த மண்ணில் பாகிஸ்தானால் முடியாத விஷயம்.. தலைகுனிந்த பிரபலங்கள்..

- Advertisement-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு என்னதான் ஆகிவிட்டது என அந்த நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற நாட்டு ரசிகர்கள் கூட ஏக்கத்தில் இருந்து வருகின்றனர். அந்த அளவுக்கு ஒரு காலத்தில் கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணியால் தற்போது சிறிய அணிகளுக்கு எதிராக கூட வெற்றிகளை குவிக்க முடியவில்லை.

ஒரு காலத்தில் எல்லாம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் என வந்து விட்டாலே ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல அணிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக தான் இருக்கும். ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அப்படி பொலிவு நிறைந்த அணியாக இல்லாமல் சாதாரண ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது.

அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டும் கேப்டன்களை மாற்றிப் பார்த்தும் அவை ஒரு முறை கூட பாகிஸ்தான் அணிக்கு கைகொடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து பாகிஸ்தானில் முதல் முறையாக அவர்களுக்கு எதிராக சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்க தொடரை இழந்துள்ளது.

பாபர் அசாம் தொடங்கி பேட்டிங், பவுலிங் என அனைத்து விஷயங்களும் பாகிஸ்தான் அணிக்கு சரியாக போகாத சூழலில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் அவர்களுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பும் தற்போதும் மங்கிப் போயுள்ளதாகவே தெரிகிறது.

- Advertisement-

அப்படி ஒரு சூழலில் கடந்த 30 மாதங்களில் தங்களின் சொந்த மண்ணில் ஒரு தொடரை கூட பாகிஸ்தானில் வெல்லாமல் இருப்பது அவர்களின் ரசிகர்களை இன்னும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 30 மாதங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்திருந்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் தோல்வி அடைந்திருந்தனர்.

இதுபோக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்திருந்த பாகிஸ்தான் அணி இரண்டரை ஆண்டுகளாக சொந்த மண்ணிலேயே ஒரு தொடரில் கூட வெல்லாமல் இருந்து வருவது ஏன் என்பது தான் அனைவரின் கேள்வியாகவும உள்ளது. அது மட்டுமல்லாமல் அணியில் வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால் அதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

சற்று முன்