- Advertisement -
Homeவிளையாட்டுPAK vs SL : 4 சதங்கள்.. 26 எக்ஸ்ட்ரா... உலக சாதனை படைத்த பாகிஸ்தான்.....

PAK vs SL : 4 சதங்கள்.. 26 எக்ஸ்ட்ரா… உலக சாதனை படைத்த பாகிஸ்தான்.. சாதித்து காட்டிய ரிஸ்வான்.. நடந்தது என்ன?

- Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் போட்டியானது இன்று ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவியது.

அந்த வகையில் இன்றைய போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

இலங்கை அணி சார்பாக குசால் மெண்டிஸ் 122 ரன்களையும், சமர விக்ரமா 108 ரன்களையும், பதும் நிசங்கா 51 ரன்களையும் குவித்து அசத்தினர். பாகிஸ்தான் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 345 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது துவக்கத்திலேயே இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களுக்கே 2 விக்கெட் என்ற நிலையில் தடுமாறியது. பின்னர் துவக்க வீரர் அப்துல்லா ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மூன்றாவது விக்கெட்டிற்கு அருமையான பாட்னர்ஷிப்பை அமைத்தார்.

- Advertisement-

குறிப்பாக மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 176 ரன்கள் குவித்து அசத்தினர். அப்போது அணியின் எண்ணிக்கை 213 ரன்களாக இருந்தபோது அப்துல்லா ஷபிக் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அடுத்து வந்த சவுத் ஷாகில்லும் 31 ரன்களில் வெளியேறினார். இருந்தாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய முகமது ரிஸ்வான் 121 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 134 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 348 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் 26 எஸ்ட்ராஸ் கொடுத்துள்ளனர். அதே போல இந்த போட்டியில் மட்டுமே இரு அணி வீரர்களும் சேர்ந்து 4 சதங்களை விளாசி உள்ளனர். அதோடு இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் இவ்வளவு ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற முதல் அணி பாக்கிஸ்தான் தான் என்ற உலக சாதனையை அந்த அணி படைத்துள்ளது.

பாக்கிஸ்தான் இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் அவர்கள் எட்டாவது முறையாக தொடர்ச்சியாக உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை அணியை வீழ்த்தி இதுவரை அவர்களிடம் தோல்வியே சந்திக்காத அணியாக சாதனையை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்