- Advertisement -
Homeவிளையாட்டுகைவசம் 1 விக்கெட்.. 11 ரன் தேவை.. மன்கட் ரன் அவுட்... உச்சகட்ட பரபரப்பு... கைமாறிப்போன...

கைவசம் 1 விக்கெட்.. 11 ரன் தேவை.. மன்கட் ரன் அவுட்… உச்சகட்ட பரபரப்பு… கைமாறிப்போன வெற்றி..

- Advertisement-

ஆசியக் கோப்பைக்கு முன்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிடி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் களமிறங்கிய குர்பாஸ் – ஜத்ரான் இணை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டியது. இருவருமே பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் மூவரையும் பவுண்டரிகளாக விளாசினார். முதல் விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் சதம் விளாசி அசத்த, இன்னொரு பக்கம் ஜத்ரான் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு மட்டும் பாகிஸ்தான் அணி 227 ரன்கள் குவித்தது. இதன்பின் சிறப்பாக ஆடிய குர்பாஸ் 151 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் சேர்த்தது. இதனால் 301 ரன்கள் என்ற அசாத்திய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் சமான் – இமாம் உல் ஹக் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர். சமான் 30 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் பாபர் அசாம் – இமாம் உல் ஹக் கூட்டணி சேர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியை சோதித்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் பாபர் அசாம் 53 ரன்களிலும், இமாம் உல் ஹக் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார். அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி திணறியது.

- Advertisement-

இதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவதற்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கைகளில் 2 விக்கெட் மட்டுமே இருந்தது. அப்போது அப்துல் ரஹ்மான் வீசிய ஓவரில் ஷடாப் கான் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்கள் சேர்த்தார். இதனால் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.

இந்த நிலையில் கடைசி ஓவரை வீச ஃபரூக்கி அழைக்கப்பட்டார். அவர் முதல் பந்தை வீச வருகையில் ஷடாப் கான் கிரீஸில் இருந்து வெளியேற, மன்கட் முறையில் ஷடாப் கானை ஃபரூக்கி வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் முதல் பந்திலேயே நசீம் ஷா பவுண்டரி அடிக்க, 4வது பந்தில் ஹாரிஸ் ராஃப் 3 ரன்கள் எடுத்தார்.

இதனால் கடைசி 2 பந்துகளில் 3 ரனக்ள் தேவைப்பட்டது. அப்போது நசீம் ஷா பவுண்டரி விளாசி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

சற்று முன்