- Advertisement 3-
Homeவிளையாட்டுஒற்றை ஆளாக சம்பவம்.. 26 பந்துகளில் அரைசதம் விளாசிய முஜீப்.. மிரண்டு நின்ற பாகிஸ்தான்.. கடைசியில்...

ஒற்றை ஆளாக சம்பவம்.. 26 பந்துகளில் அரைசதம் விளாசிய முஜீப்.. மிரண்டு நின்ற பாகிஸ்தான்.. கடைசியில் ட்விஸ்ட்!

- Advertisement-

பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி 2-0 என்ற தொடரை கைப்பற்றியதால், ஆஃப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தும் தீவிரத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

இந்த நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி தரப்பில் சமான் – இமாம் உல் ஹக் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், சமான் 27 ரன்களும், இமாம் உல் ஹக் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் நட்சத்திர வீரர்களான கேப்டன் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் இணை சேர்ந்தது.

- Advertisements -

3வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடிய இவர்கள் இருவருமே அரைசதம் கடந்தனர். பாபர் அசாம் அரைசதம் கடந்து 60 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இரு போட்டிகளில் சொதப்பிய ரிஸ்வான் 63 ரன்கள் எடுத்து ஃபார்முக்கு திரும்பினார். தொடர்ந்து வந்த சல்மான் 38 ரன்களும், நவாஸ் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்தது.

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 269 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.சவாலான இலக்கு என்பதால் தொடக்க வீரர் குர்பாஸ் நிலைத்து நின்று ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் குர்பாஸ் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஜத்ரான் டக் அவுட்டாகினார். சிறிது நேரம் போராடிய தொடக்க வீர்ர ரியாஸ் ஹசன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த கமல் 37 ரன்கள் எடுத்தார்.

- Advertisement-

இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது. இந்த நிலையில் திடீரென பந்துவீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சில நிமிடங்கள் என்ன நடக்கிறது என்பது அறியாமல் பாகிஸ்தான் அணி திக்கு முக்காடியது. பாகிஸ்தான் அணி கண்மூடி திறப்பதற்குள் முஜீப் அரைசதம் கடந்தார்.

சிறப்பாக போராடிய முஜீப் ஆட்டத்தில் அதிசயத்தை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 26 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். ஆனால் ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக ஆஃப்கானிஸ்தான் அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக முகமது ரிஸ்வானும், தொடர் நாயகனாக இமாம் உல் ஹக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

சற்று முன்