- Advertisement -
Homeவிளையாட்டுடிராவிட்டுக்கு ஆப்பு வச்ச குட்டி குழந்தை.. நீலாம்பரி மாதிரி காத்திருந்து வச்ச ஆப்பு

டிராவிட்டுக்கு ஆப்பு வச்ச குட்டி குழந்தை.. நீலாம்பரி மாதிரி காத்திருந்து வச்ச ஆப்பு

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே சுட்டி குழந்தை போல் இருப்பவர் என்றால் அது பார்த்தீவ் பட்டேல் தான். அவர் விளையாடிய காலத்திலும் சரி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காலத்திலும் சரி இப்போது வரை அந்த குழந்தை முகம் மாறவே இல்லை.

ஆனால் அந்த பார்த்தீவ் பட்டேலுக்கு டிராவிட் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. தன்னுடைய நீண்ட நாள் பகையை மொத்தமாக கொட்டி தீர்த்து இருக்கிறார். குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு நீலாம்பரி போல் செயல்பட்டு இருக்கிறார் பார்த்தீவ் பட்டேல்.

- Advertisement -

இது குறித்து பேசிய பார்த்தீவ் பட்டேல் இந்திய கிரிக்கெட் அணியில் குறிப்பாக டி20க்கு ராகுல் டிராவிட் சரிப்பட்டு வர மாட்டார் என ஓப்பனாகவே தன்னுடைய கோபத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ஹர்திக் பாண்டியா ஒரு நல்ல கேப்டனாக இருந்தாலும் அவருக்கு வேண்டிய உதவிகளை டிராவிட் செய்வதில்லை என்று வெளிப்படையாகவே சாடியிருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் நல்ல கேப்டன்ஷிப் செய்து வந்ததற்கு நெஹ்ரா ஒரு காரணம் என்றும் ஆனால் தற்போது ராகுல் டிராவிட் அதுபோல ஒரு உதவியை ஹர்திக் பாண்டியாவுக்கு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு இருக்கிறார்.

- Advertisement-

வெஸ்ட் இண்டீஸ் எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா சில தவறுகளை செய்ததை பட்டியலிட்ட பார்த்தீவ் பட்டேல். அதனை அவர் செய்ததற்கு காரணம் டிராவிட்டின் உதவி இல்லாத தான் என்றும் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

உதாரணத்திற்கு சாஹல் முழு ஓவரை வீசாமல் போனதற்கு ஹர்திக் பாண்டியாவின் திமிரு காரணம். ஆனால் இது டிராவிட்டின் உதவி இல்லாமையே காரணம் என இப்படி வஞ்சத்தை பொழிந்திருக்கிறார். அத்துடன் பரவாயில்லை டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு சரியான பயிற்சியாளர் கிடையாது என்றும் அவர் சுறுசுறுப்பான பயிற்சியால் கிடையாது என்றும் பார்த்தீவ் பட்டேல் சாடி இருக்கிறார்.

டிராவிட் மீது இப்படி விமர்சனம் வைத்ததன் மூலம் அவர் மீது ஏதோ மறைமுக கோபத்தை வெளியே கொட்டி அவருக்கு எதிராக குழியை பறித்தது போல் செயல்பட்டு இருக்கிறார் பார்த்திவ் பட்டேல்.

சற்று முன்