- Advertisement 3-
Homeவிளையாட்டுமும்பை கூட மேட்ச்லயே அப்படி நினைக்கல, ஆனா இப்போ... பேட்ஸ்மேனா இருந்திருக்கணும்.. ஏங்கிய பேட் கம்மின்ஸ்..

மும்பை கூட மேட்ச்லயே அப்படி நினைக்கல, ஆனா இப்போ… பேட்ஸ்மேனா இருந்திருக்கணும்.. ஏங்கிய பேட் கம்மின்ஸ்..

- Advertisement 1-

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் தங்களின் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. அதன் பின்னர் ஏழு சீசன்களில் ஹைதராபாத் அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல், மற்ற அணிகளை கட்டுப்படுத்தவும் முடியாமல் பிளே ஆப் சுற்றுக்கும் பெரிதாக முன்னேற முடியாமல் திணறி வந்திருந்தது.

அப்படி இருக்கையில் தான் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் யாருமே எதிர்பாராத ஒரு விஸ்வரூபத்தை எடுத்து பட்டையை கிளப்பி வருகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வருகையால் அந்த அணி பலம் பெற்றிருந்த நிலையில் அவரது தலைமையும் அந்த அணிக்கு பெரிதாக கைகொடுத்து வருகிறது.

டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாஸன், பேட் கம்மின்ஸ், அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், புவனேஷ்வர் குமார், நடராஜன் என அந்த அணி முழுக்க முழுக்க தலைசிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பது பெரிய சாதகமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், சமீபத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து ஆடி இருந்த ஹைதராபாத் அணி, மும்பை அணிக்கு எதிராக தங்களின் சொந்த அதிகபட்ச ஸ்கோரை இந்த போட்டியில் முறியடித்து 287 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியில் முதலில் அதிரடி காட்டிய கோலி, 42 ரன்களிலும், பாப் டு பிளெஸ்ஸிஸ் 62 ரன்களிலும் அவுட்டாக, 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தனர். அடுத்த 10 ஓவர்களில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினாலும், பெங்களூரு அணி 262 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

- Advertisement 2-

அதே வேளையில், சேசிங்கில் சில முக்கியமான சாதனைகளையும் ஆர்சிபி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வெற்றிக்கு பின் பேசியிருந்த பேட் கம்மின்ஸ், “நான் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். கிரிக்கெட்டின் அற்புதமான போட்டி இது. அற்புதமான, வேடிக்கையான விஷயங்கள் நிறைந்திருந்தது. மும்பைக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த போது அது மீண்டும் நடக்காது என நினைத்தேன். ஆனால், மீண்டும் அதனை உடைத்து விட்டோம்.

நீங்கள் ஒரு பந்து வீச்சாளராக 7 முதல் 8 ஓவர்கள் வீசும் போது தான் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். நான் இந்த பிட்ச்சை ஆராய்ந்து பார்ப்பதை நிறுத்தி விட்டேன். சின்னசாமி மைதானம் வறண்டு இருந்தாலும் பேட்டிங்கிற்கு சாதகமாக காணப்பட்டது. நான்கு வெற்றிகள் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் அணியில் உள்ள பேட்ஸ்மேன்களும் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்” என கூறியுள்ளார்.

சற்று முன்