ஐபிஎல் தொடர் லீக் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளின் போட்டி நடந்து முடிந்த நிலையில் இரண்டு லீக் போட்டிகள் மீதம் இருந்தது. இந்த போட்டிகளின் முடிவால் பெரிய தாக்கம் எதுவும் புள்ளிப் பட்டியலில் ஏற்படாமல் போனாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும் அணிகள் யார் என்பதை உறுதி செய்யும் பின்னணியும் இந்த போட்டிகளுக்கு இருந்தது.
இதன் முதல் போட்டியில் தான் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடி முடித்துள்ளது. இதில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 215 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரின் முதல் பந்தில் எட்டி ஐந்து பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றிருந்தது.
தற்போது அவர்கள் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்திருந்தாலும் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவை பொறுத்து தான் அவர்கள் அதனை தக்க வைப்பதும் தெரியவரும். ஒருவேளை கொல்கத்தா அணியை வீழ்த்தினால் அவர்கள் இரண்டாவது இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளது.
அதே வேளையில், கொல்கத்தா அணி ராஜஸ்தானை வீழ்த்தினால் ஹைதராபாத் அணி இரண்டாவது இடத்தை தக்க வைத்து குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையே எதிர்கொள்ளலாம். அப்படி ஒரு சூழலில், தற்போது கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத இருந்த மைதானத்தில் மழை பெய்து வரும் நிலையில் போட்டி நடக்குமா நடைபெறாதா என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்துள்ளது.
இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ் அணியை தங்களின் கடைசி லீக் போட்டியில் வீழ்த்தியதன் பின்னர் பேசி இருந்த பேட் கம்மின்ஸ், “நாங்கள் எங்களின் சொந்த மைதானத்தில் 7 போட்டிகள் ஆடி ஆறில் வெற்றி பெற்றுள்ளோம். இது மிகவும் அற்புதமான ஒரு தருணம். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆடியிருந்தோம். அதில் அபிஷேக் ஷர்மா ஒரு அற்புதமான வீரராக இருந்து வருகிறார். அவருக்கு எதிராக நான் பந்து வீசவே விரும்புவது கிடையாது.
அவர் மிக சுதந்திரமாக ஆடி வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் இல்லாமல் சுழற்பந்து வீச்சாளர்களையும் எதிர்த்து ஆடுவது மிக பயங்கரமாகவும் உள்ளது. அவரை போல நிதிஷ் ரெட்டி ஒரு கிளாஸ் பிளேயர். அவர் தனது வயதை தாண்டிய முதிர்ச்சியுடன் இருந்து வருகிறார். மேலும் எங்கள் டாப் ஆர்டருக்கும் சரியான வீரராகவும் இருக்கிறார்.
எங்கள் அணியில் உள்ள சில வீரர்களும், நானும் இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் ஆடியது கிடையாது. எங்களை எதிர்த்து ஆடுவது பிளே ஆப்பில் யார் என்பதே தெரியாது என்றாலும் மிக உற்சாகமாக தான் உள்ளோம்” என பேட் கம்மின்ஸ் கூறினார்.