- Advertisement 3-
Homeவிளையாட்டுஅப்படி மட்டும் நடந்தா நான் கேப்டன்சிய விட்டு விலகிடுவேன்.. பேட் கம்மின்சோட கலங்க வைக்கும் மனசு..

அப்படி மட்டும் நடந்தா நான் கேப்டன்சிய விட்டு விலகிடுவேன்.. பேட் கம்மின்சோட கலங்க வைக்கும் மனசு..

- Advertisement 1-

ஆஸ்திரேலியா அணிக்கு கடந்த ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் ஏறுமுகமாக தான் தொடர்ந்து அனைத்து வடிவிலான தொடர்களிலும் இருந்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பை என கடந்த ஆண்டு நடந்த இரண்டு முக்கியமான தொடர்களிலும் சாம்பியன்கள் என்றால் அது ஆஸ்திரேலியா அணி தான். அந்த அளவுக்கு அவர்கள் சிறப்பாக இருக்கும் நிலையில் இதற்கு மிக முக்கியமான பங்கு அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸுக்கும் உண்டு.

தனது அணி வீரர்களை மிக அற்புதமாக வழி நடத்தி வருவதுடன் எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவதிலும் பேட் கம்மின்ஸ் கில்லாடியாக இருந்து வருகிறார். அப்படி ஒரு சூழலில் தான் திடீரென அவர் ஒரு விஷயம் நடந்தால் தான் கேப்டன்சியை விட்டு விலகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மண்ணிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. இதன் முதல் போட்டி சமீபத்தில் முடிந்திருந்த நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள் குவித்து இருந்தது.

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்திருந்த ஆஸ்திரேலிய அணி, ரன் சேர்க்கவே தட்டுத் தடுமாறி இருந்த நிலையில் கேமரூன் 174 ரன்கள் அடித்ததன் காரணமாக அவர்கள் 383 ரன்கள் சேர்த்து இருந்தனர். இதன் பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சொந்த மண்ணாக இருந்த போதிலும் ரன் சேர்க்க தவற அவர்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் 369 ரன்கள் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

- Advertisement 2-

இதனை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு கடும் குடைச்சல் கொடுத்த லயன், ஆறு விக்கெடுகள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். அதுமட்டுமில்லாமல், மொத்தம் ஒன்பது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்த மூன்றவாது வீரர் என்ற சாதனையையும் லயன் படைத்துள்ளார்.

இதனிடையே நாதன் லயனின் சாதனைக்கு பின்னர் பேசியிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், “நான் ஏற்கனவே லயனிடம் கூறி இருந்தேன். எந்த நாள் நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களோ அப்போது கண்டிப்பாக நான் என்னுடைய கேப்டன்ஷில் இருந்து விலகி விடுவேன். ஏனென்றால் லயன் இருக்கும் போது போட்டியில் அனைத்துமே எளிதாக இருக்கும். அவரை போல ஒருவர் இருக்க வேண்டும் என்பது அனைத்து கேப்டன்களின் கனவாகும்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்