- Advertisement -
Homeவிளையாட்டுஎன்னால முடியாத ஒரே விஷயம்.. இந்தியாவுக்கு எதிரா செஞ்சு காட்டுறேன்.. சவால் விட்ட பேட் கம்மின்ஸ்..

என்னால முடியாத ஒரே விஷயம்.. இந்தியாவுக்கு எதிரா செஞ்சு காட்டுறேன்.. சவால் விட்ட பேட் கம்மின்ஸ்..

- Advertisement-

இந்த ஆண்டின் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியாவிற்கு மிக நெருக்கடியான ஒரு தொடராக மாறி உள்ளது. கடந்த இரண்டு முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி இருந்தது. இந்த இரண்டிலும் அவர்கள் தோல்வி அடைந்தாலும் அதற்காக முன்னேறியது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா முன்னேறுவதற்கான வாய்ப்பு தற்போது கடினமாக மாறி உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பாக அந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்தியாவின் வாய்ப்பை எளிதாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரையும் சொந்தமாக்கி சரித்திரம் எழுதியிருந்தது. இந்த தோல்விகளால் இந்திய அணி துவண்டு போனதுடன் மட்டுமில்லாமல் மீதமிருக்கும் ஆறு டெஸ்டில் நான்கிலாவது இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி உருவாகியுள்ளது.

இதில் ஒரு டெஸ்ட் போட்டி நியூசிலாந்துக்கு எதிராகவும் மற்ற ஐந்து போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணிலும் நடைபெற இருப்பது இந்தியாவுக்கு பாதகமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்த்து பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லவே இல்லை. அதிலும் சொந்த மண்ணிலேயே இந்தியாவுக்கு எதிராக இரண்டு முறை தொடர்ச்சியாக பார்டர் கவாஸ்கர் டிராபித் தொடரை இழந்திருந்தது. இதனால் அவர்கள் ஹாட்ரிக் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்த சமயத்தில் தான் சொந்த மண்ணிலேயே தொடரை இழந்து துவண்டு போயிருந்தனர்.

இந்த நிலையில் இது பற்றி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “நான் வெற்றி பெற வேண்டும் என நினைக்கக்கூடிய மிகப்பெரிய தொடர் பார்டர் கவாஸ்கர் டிராபி. நானும் மற்ற சில ஆஸ்திரேலிய வீரர்களும் சொந்த மண்ணில் ஆடும் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். இந்திய அணி கடந்த இரண்டு முறையும் எங்களது மண்ணில் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement-

இதனால் வரவிருக்கும் தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த முறை ஆஸ்திரேலிய அணியில் அனைவருமே சிறந்த ஃபார்மில் இருப்பதால் நாங்கள் மோசமாக ஆடுவதற்கு எந்த காரணமும் இல்லை. ஒரு தொடரை இழந்து நெருக்கடியாக இருக்கும் அணிக்கு எதிராக ஆடும் போது நன்றாக தான் இருக்கும். ஆனால் கடந்த இரண்டு முறையும் எங்கள் மண்ணில் இந்திய அணி அபாரமாக ஆடி உள்ளது.

அப்படி ஒரு சூழலில் அவர்களை அமைதியாக்குவது தான் எங்கள் வேலை” என பேட் கம்மின்ஸ் கூறி உள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு நாள் உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்பாக இந்திய அமைதியை சொந்த மண்ணில் அமைதியாக்கி கோப்பையை வெல்வோம் என சொல்லி அதனை செய்து காட்டி இருந்தார் பேட் கம்மின்ஸ்.

சற்று முன்