- Advertisement 3-
Homeவிளையாட்டுபேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் எடுத்ததுனால.. வேர்ல்டு கப் இந்தியாவுக்கு தான்.. பயங்கரமான கணக்கை போட்ட ரசிகர்கள்..

பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் எடுத்ததுனால.. வேர்ல்டு கப் இந்தியாவுக்கு தான்.. பயங்கரமான கணக்கை போட்ட ரசிகர்கள்..

- Advertisement 1-

இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இவற்றுள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் வழக்கம் போல ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் பட்டையைக் கிளப்பி வருவதால் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் அதே வேலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஐசிசி தொடரில் சிறப்பாக ஆடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் அவர்கள் மண்ணில் போட்டிகள் நடைபெறுவதால் சாதகமாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளும் கணிக்க முடியாத அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில் லீக் சுற்றில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து சூப்பர் 8-க்கும் முன்னேறி இருந்த இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் அதிரடி வெற்றியை பெற்றிருந்தது. இன்னும் ஒரு தோல்வியைக் கூட இந்த டி 20 உலக கோப்பையில் சந்திக்காமல் இருக்கும் இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இதே ஆட்டத்தை தொடர்ந்து அரையிறுதிக்கு எளிதாக முன்னேற வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ஆனால் அதே வேளையில் வார்னர், ஸ்டார்க், கம்மின்ஸ் என ஆபத்தான வீரர்கள் இடம் பெற்றிருக்கும் ஆஸ்திரேலியா அணியை அவ்வளவு எளிதாக தொட்டு பார்த்து விட முடியாது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இந்த முறை அதற்கெல்லாம் சேர்த்து தக்க பதிலடியை கொடுக்கும் என தெரிகிறது.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில் தான் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்ததும் இந்திய அணி தான் டி20 உலக கோப்பையை இந்த முறை வெல்லும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் சமீபத்தில் நடந்த போட்டியில் மோதி இருந்தது. இதில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.

மேலும், அவர்களுக்கு எதிராக பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இதற்கு முன்பாக கடந்த 2007 ஆம் ஆண்டு, முதல் டி20 உலக கோப்பை தொடரின் போதுதான் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் பிரெட் லீ இதே வங்காளதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி தான் டி20 உலக கோப்பையை வென்றிருந்தது.

மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் அதே வங்காளதேச அணிக்கு எதிராக 17 ஆண்டுகள் கழித்து ஹாட்ரிக் எடுத்துள்ளதால் இந்திய அணி அதேபோல 2 வது முறையாக டி 20 உலக கோப்பையை கைப்பற்றும் என்னும் ரசிகர்கள் ஜாலியாக குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்