- Advertisement -

நாங்களும் ஜெயிக்க தான் நெனச்சோம்.. ஆனா சூர்யகுமார் எல்லாத்தையும் கெடுத்துட்டாரு – பேட் கம்மின்ஸ்..

பல அணிகளை தங்களின் அதிரடி ஆட்டம் பேட்டிங் மூலம் நிலைகுலைய வைத்திருந்த ஹைதராபாத் அணிக்கு கடைசி நான்கு போட்டிகளில் மூன்று முறை தோல்வி அடைந்துள்ளனர். இதில் ஐபிஎல் தொடரை கட்டி ஆண்டு வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக தான் இந்த மூன்று தோல்விகளையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.

புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் 11 போட்டிகள் ஆடி ஆறில் வெற்றி பெற்றிருந்தாலும் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றை உறுதி செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழலும் சன்ரைசர்ஸ் அணிக்கு உருவாகி உள்ளது.

- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையில் ஒரு சில போட்டிகளில் பேட்டிங் அதிகமாக கை கொடுக்காமல் போனதால் தோல்வி அடையும் நிலை உருவாகியிருந்தது. தற்போதும் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் கூட அப்படி ஒரு சூழலை தான் ஹைதராபாத் அணியினர் எதிர்கொண்டு இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் சூரியகுமார் யாதவ் சிறப்பாக ஆடி சதம் அடிக்க பதினெட்டாவது ஓவரில் இலக்கு எட்டி இருந்தனர். மும்பை அணியின் பிளே ஆப் வாய்ப்பு மங்கி போனாலும் எதிரணியினருக்கு தோல்வி கொடுப்பதால் அவர்களுக்கும் பிளே ஆப் வாய்ப்பு கடினமாகும் என்றே தெரிகிறது.

- Advertisement -

இதனால் பிளே ஆப் வாய்ப்பை எளிதாக பெற்று விடலாம் என எதிர்பார்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமே இந்த போட்டியில் மிஞ்சி இருந்தது. இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “எங்கள அணியின் ரன்னும் நினைத்ததை விட குறைவாகத்தான் இருந்தது. எங்கள் அணியின் சில தவறுகள் இருந்தாலும் போட்டி எங்கள் பக்கம் இருப்பது போன்றே இருந்தது.

எங்களது பேட்டிங்கில் 10 முதல் 12 ஓவர்களுக்கிடையே நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். இதனால், சேசிங்கில் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் உணர்ந்தோம். நாங்களும் இந்த போட்டியில் வெற்றி பெற தான் நினைத்தோம். ஆனால் டி 20 கிரிக்கெட்டை பொருத்தவரையில் எப்போதுமே அப்படி அமையாது.

சூர்யகுமார் யாதவ் எங்களுக்கு எதிராக சிறப்பாக ஆடினார். நாங்கள் எப்போதும் எங்களின் சொந்த மைதானத்தில் ஆடுவதை தான் விரும்புகிறோம். இனி வரும் போட்டிகளில் எங்களுக்காக என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளோம்” என பேட் கம்மின்ஸ் கூறினார்.

- Advertisement -

Recent Posts