- Advertisement 3-
Homeவிளையாட்டுஃபைனல்ஸ் போவோம்னு அப்பவே தெரியும்.. ராஜஸ்தானுக்கு எதிரா அப்படி நடந்தது எனக்கே சர்ப்ரைஸ்.. - கம்மின்ஸ்...

ஃபைனல்ஸ் போவோம்னு அப்பவே தெரியும்.. ராஜஸ்தானுக்கு எதிரா அப்படி நடந்தது எனக்கே சர்ப்ரைஸ்.. – கம்மின்ஸ் வெளிப்படை..

- Advertisement 1-

பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்த கடந்த ஒரு வருடம், மிகச் சிறந்த ஆண்டாகவே கிரிக்கெட் பயணத்தில் இருந்து வருகிறது. அவரது தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பை உள்ளிட்டவற்றை வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, தலைச்சிறந்து விளங்கியதற்கும் முக்கிய காரணமாக பேட் கம்மின்ஸ் இருந்து வருகிறார்.

இதனிடையே 20 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அவரை ஏலத்தில் எடுத்ததும் பெரிய எதிர்பார்ப்பும் அவரைச் சுற்றி உருவாக்கி இருந்தது. ஒரு பக்கம் இத்தனை கோடி ரூபாய்க்கு அவரை எடுக்க வேண்டுமா என்பதில் விமர்சனம் இருந்தாலும் அவை அனைத்திற்கும் தற்போது பதிலடி கொடுத்துள்ளார் பேட் கம்மின்ஸ்.

ஹைதராபாத் அணியை மிகச் சிறப்பாக லீக் போட்டி முழுவதும் வழிநடத்தி வந்த கம்மின்ஸ், இரண்டாவது இடத்தையும் புள்ளிப் பட்டியலில் பிடிக்க வழி செய்திருந்தார். தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு எதிராக அவர்கள் குவாலிஃபயர் 1 போட்டியில் சந்தித்திருந்த நிலையில் இதில் தோல்வி அடைந்திருந்தனர்.

இருந்தாலும் இன்னொரு வாய்ப்பு அமைய, தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 2 போட்டியிலும் எதிர்கொண்டு அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 175 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அணி இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை சிறப்பாக கையாண்டு ரன் சேர்க்க விடாமல் தடுத்திருந்தது.

- Advertisement 2-

சேப்பாக்கம் மைதானம் என்பதால் அபிஷேக் ஷர்மா, சபாஷ் அகமது உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி அசத்தியிருந்தார் பேட் கம்மின்ஸ். இதனால், ராஜஸ்தான் அணியால், 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடர்ந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத், இறுதி போட்டியில் மீண்டும் கொல்கத்தா அணியை சந்திக்கிறது.

மீண்டும் கொல்கத்தாவை எதிர்கொள்ள இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது பற்றி பேசிய பேட் கம்மின்ஸ், “அணி வீரர்கள் அனைவருமே இந்த சீசனில் அபாரமாக செயல்பட்டு இருந்ததுடன் இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பது தான் ஐபிஎல் தொடருக்கு முன்பாக குறிக்கோளாகவும் இருந்தது. எங்களது பலம் பேட்டிங்காக இருந்தாலும் புவனேஸ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் என அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்களையும் குறைத்து எடை போட மாட்டோம்.

அதுவே எனது பணியை மிக எளிதாக வைத்திருந்தது. சபாஷ் அஹமத் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் மிடில் ஓவர்களில் பந்து வீசியது தான் நாங்கள் வெற்றி பெறவும் காரணமாக இருந்தது. அபிஷேக் ஷர்மாவை பந்து வீச வைத்தது எனக்கே மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். 170 ரன்கள் என்பது சேப்பாக்கத்தில் கடினமாக இலக்கு என்பதால் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து விட்டால் வெற்றி பெற முடியும் என்பதையும் தெரிந்திருந்தோம்” என பேட் கம்மின்ஸ் கூறினார்.

சற்று முன்