- Advertisement -
Homeவிளையாட்டுரொம்ப கஷ்டமா இருக்கு... ரெண்டு நாள் லீவு எடுத்துக்கிட்டு அப்பறம் வரோம்... தோல்விக்கு பிறகு பேட்...

ரொம்ப கஷ்டமா இருக்கு… ரெண்டு நாள் லீவு எடுத்துக்கிட்டு அப்பறம் வரோம்… தோல்விக்கு பிறகு பேட் கம்மின்ஸ் வேதனை

- Advertisement-

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் வெறும் 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை.

அதேபோல் வழக்கமான ஆஸ்திரேலியா போல் அல்லாமல் ஏராளமான கேட்ச்களை கோட்டைவிட்டது. பவுலிங், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என்று ஆஸ்திரேலிய அணியை போலவே ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடவில்லை. ஏதோ கத்துக்குட்டி அணியை போல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் செயல்பட்டனர்.

உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் நெட் ரன் ரேட்டை காப்பாற்ற கூட ஆஸ்திரேலிய அணி முயற்சிக்கவில்லை. இந்த தோல்வியில் இருந்து ஆஸ்திரேலிய அணி எப்படி மீண்டு வரும் என்பதே ரசிகர்களிடையே விவாதமாக உள்ளது. இந்த தோல்வி பற்றி கம்மின்ஸ் சொல்லும் போது, தென்னாப்பிரிக்கா அணியின் டி காக் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கிறேன்.

எங்களால் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்த முடியவில்லை. அவர்கள் 312 ரன்களை இலக்காக நிர்ணயித்ததை எங்களால் சேஸ் செய்ய முடியும் என்று நினைத்தோம். அதேபோல் அந்த அணியின் பவுலிர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள். டாஸ் முடிவை மாற்றிக் கொள்வீர்களா என்று கேட்டால், நிச்சயமாக எதையும் சொல்ல முடியாது.

- Advertisement-

ஏனென்றால் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் முதலில் நாங்கள் எப்படி சிறப்பாக செயல்படுவது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெரிதாக எதையும் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அணி வீரர்கள் அனைவரும் சோகமாக இருக்கிறோம். 2 நாட்கள் ஓய்வெடுத்த பின், நிச்சயம் அடுத்த போட்டியில் சிறந்த கம்பேக்கை கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததே இல்லை. ஆனால் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி மோசமான தோல்விகளை பெற்றுள்ளது.

சற்று முன்