- Advertisement -
Homeவிளையாட்டுஉலக கோப்பை எப்படி இருக்கும்னு இந்தியா எங்களுக்கு காட்டிடுச்சி... இனிமே சுதாரிச்சிக்கணும் - பேட் கம்மின்ஸ்...

உலக கோப்பை எப்படி இருக்கும்னு இந்தியா எங்களுக்கு காட்டிடுச்சி… இனிமே சுதாரிச்சிக்கணும் – பேட் கம்மின்ஸ் பேச்சு

- Advertisement-

தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இங்கு உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணியோடு மூன்று ஒரு நாள் போட்டிகளை விளையாட தயாரானது. அதன் முதல் போட்டி நேற்று பஞ்சாபில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் குவித்தது.

அடுத்ததாக பேட்டிங் ஆட வந்து இந்திய அணியின் துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றே கூற வேண்டும். ருதுராஜ் 77 பந்துகளில் 71 ரன்களும், கில் 63 பந்துகளில் 74 ரன்கள் குவித்தனர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று ரன்கள் வெளியேற கே எல் ராகுல் ஒருபுறம் நிதானத்தை கடைப்பிடித்தார்.

இஷான் கிஷன் 18 ரன்களில் வெளியேற சூரியகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் இணைந்து அணியின் ஸ்கோரை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றனர். கேஎல் ராகுல் 58 ரன்களும் சூரியகுமார் யாதவ் 50 ரன்களும் விலாசினர். இந்த போட்டியின் மூலம் சூரியகுமார் யாதவ், ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாட முடியும் என்பதை காட்டி உள்ளார்.

இந்திய அணி, 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை காயம் காரணமாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில்,

- Advertisement-

நான் திரும்பி வந்ததில் தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி தான். அதேபோல் இந்தியாவில் முதல் ஆட்டத்தை விளையாடுவதிலும் மகிழ்ச்சி. எங்கள் அணியை பொறுத்தவரை, ஒரு சிலர் நன்றாக பேட்டிங் செய்தார்கள் ஒரு சிலர் நன்றாக பவுலிங் செய்தார்கள். ஆனால் ஒரு அணியாக எடுத்துக் கொண்டால் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

காயம் காரணமாக வெளியில் உள்ள வீரர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் கூட விளையாடாமல் போக வாய்ப்புள்ளது. மேக்ஸ் தற்போது தான் இந்தியாவிற்கு வந்துள்ளார். ஸ்மித் மற்றும் வார்னர் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் இருவரின் ஆட்டத்தையும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

உலகக் கோப்பை போன்ற பெரிய டோர்னமெண்டுக்கு முன் அந்தத் தொடர் எப்படி இருக்க போகிறது என்பதற்கான ஒரு முன்னோட்டம் எங்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு முன்பே நாம் ஒரு ஸ்டேண்டர்டை செட் செய்து நல்ல ஒரு ரிதமை உருவாக்க வேண்டும் என்று பேட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

சற்று முன்