Homeகிரிக்கெட்பவுலர்களை நெனச்சா பாவமா இருக்கு... இவங்க ரெண்டு பேரும் செம டேஞ்சரா இருக்காங்க... வெற்றிக்கு பின்...

பவுலர்களை நெனச்சா பாவமா இருக்கு… இவங்க ரெண்டு பேரும் செம டேஞ்சரா இருக்காங்க… வெற்றிக்கு பின் கம்மின்ஸ் பேச்சு

-Advertisement-

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பயிற்சி எடுக்கும் விதத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் இந்த தொடரை வென்றுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணி மிகவும் மோசமாக விளையாடியது. ஆனால் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் தங்களது முழுமையான திறனை வெளிப்படுத்த தொடங்கினர்.

-Advertisement-

அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான வார்னர் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 96 ரன்களும் எடுத்தனர். அதேபோல ஸ்டீவ் ஸ்மித் 74 ரன்களும் லாபுசேன் 72 ரன்களும் சேர்த்தனர். இப்படி அடுத்தடுத்து வந்த நான்கு வீரர்களும் படிப்படியாக ஸ்கோரை உயர்த்தியதன் விளைவாக 50 ஓவர்கள் முடிவு ஏழு விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 352 கண்களை சேர்த்தது.

இந்திய அணியும் தனது ஆட்டத்தை சிறப்பாக துவங்கியது என்றே கூற வேண்டும். கேப்டன் ரோகித் சர்மா 57 பந்துகளில் 81 விலாசினார். ஆனால் மற்றொருபுறம் இந்த போட்டியில் புதிதாக ஓபனிங் வீரராக இறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளை சந்தித்து வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

-Advertisement-

அடுத்து வந்த விராட் கோலி 56 ரன்கள் எடுக்க, கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காததால் இந்திய அணி 49.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் மூலம் ஆஸ்திரேலியாவிடம் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது இந்த நிலையில் இந்த போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில்,

“இங்கு வெயில் நேரத்தில் சூட்டில் பவுலிங் செய்வதை காட்டிலும் இரவில் பௌலிங் செய்வது சந்தோஷமாக உள்ளது. மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் விளையாடாமல் இருந்த நிலையில் இன்றைய போட்டியில் மேக்ஸ்வெல் 4 விக்கெட்க்குகளை எடுத்தார். அதே போல ஸ்டார்க்கும் நல்ல ஒரு ரிதம்மில் உள்ளார்.

உலக கோப்பையை பொறுத்தவரை டிராவிஸ் ஹெட் இன்னும் பிட்டாக இல்லாததால் ஆரம்பப் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். வார்னர் மற்றும் மார்ஸ் அணியின் துவக்க வீரர்களாக இருப்பார்கள். இந்த கூட்டணி மிகவும் டேஞ்சரான கூட்டணியாக உள்ளது. அவர்களுக்கு எதிராக பவுலர்கள் பந்துவீச்சை துவங்குவது என்பது சற்று கவலைக்குரிய விடயம் தான். இன்று ஒரு முழு அணியுடன் இந்த போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்