- Advertisement 3-
Homeவிளையாட்டுபதற்றமா இருந்தேன், அப்போ தோனி கொடுத்த ஐடியா தான்.. பதிரானா விக்கெட் எடுக்க காரணமா இருந்த...

பதற்றமா இருந்தேன், அப்போ தோனி கொடுத்த ஐடியா தான்.. பதிரானா விக்கெட் எடுக்க காரணமா இருந்த வார்த்தை..

- Advertisement 1-

மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் ஐந்தாவது போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போது அதனை 16 வது ஓவரிலேயே மிக எளிதான ஒரு இலக்காக நினைத்து எட்டி பிடித்திருந்தது. இதே மும்பை வான்கடே மைதானத்தில் தங்களின் அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணியையும் அவர்கள் சந்தித்திருந்தனர்.

முதலில் ஆடிய சிஎஸ்கே 206 ரன்கள் எடுக்க இந்த இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி மிக அதிரடியான ஆட்டத்தை தான் கையில் எடுத்திருந்தது. இதனால் பெங்களூருக்கு நடந்தது போல, சிஎஸ்கேவுக்கும் நடக்கும் என்றும் மும்பை ரசிகர்கள் கங்கணம் கட்டி வந்த சூழலில், யாரும் எதிர்பாராத வகையில் உள்ளே வந்து பந்து வீசி இருந்தார் பதிரானா. குட்டி மலிங்கா என வர்ணிக்கப்படும் இவர் தனது முதல் பந்திலேயே இஷான் கிஷனை அவுட்டெடுத்து இருந்தார்.

தொடர்ந்து மூன்றாவது பந்தில் சூர்யகுமார் டக் அவுட் ஆக, மும்பை அணியின் அதிரடியும் லைட்டாக மங்கத் தொடங்கி விட்டது. இதன் பின்னர் ரோஹித் மட்டும் அதிரடி காட்டி சதமடிக்க, அதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் ரன் அடிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் அவர்கள் 186 ரன்கள் தான் எடுத்திருந்தனர்.

அதே போல இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்திருந்த பதிரானா, இஷான் கிசன், சூரியகுமார், திலக் வர்மா மற்றும் ஷெப்பர்ட் ஆகியோரின் விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். மேலும் வான்கடே மைதானமாக இருந்தாலும் சிஎஸ்கே கெத்து தான் என்பதை நிரூபிக்கவும் அவர் காரணமாக இருந்த நிலையில், வெற்றிக்கு பின்னரும் பேசி இருந்தவர் தனது சிறந்த பந்து வீச்சிற்கான காரணத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement 2-

இது பற்றி பதிரானா பேசுகையில், “பவர் ப்ளேவில் நாங்கள் பந்து வீசும் போது நான் சற்று பதட்டமாக தான் இருந்தேன். அப்போது தோனி தான் என்னிடம் வந்து நீ மிகவும் அமைதியாக இருந்து எப்போதும் போல உன்னுடைய பந்துவீச்சை செய் என்று கூறியிருந்தார். அதுதான் எனக்கு மிகப்பெரிய அளவில் உதவி இருந்ததுடன் தன்னம்பிக்கையும் கொடுத்திருந்தது.

நான் போட்டியின் முடிவை பற்றி எதுவும் சிந்திக்காமல் என்னுடைய வேலையை மட்டும் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்த்தேன். அப்படி என்னுடைய திட்டத்தை நான் சரியாக செயல்படுத்தினால் எனக்கான விருதுகளும் கிடைக்கும் என்றும் தெரியும். மேலும் சில நேரங்களில் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப என்னுடைய திட்டத்தை மாற்றவும் செய்வேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக சிறிய காயத்தால் நான் அவதிப்பட்டு இருந்தேன். ஆனால் அணியில் இருந்த அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்து என்னை மீட்டெடுத்ததன் காரணமாக தான் இப்போது நான் இந்த ஃபார்மில் இருப்பதற்கு முக்கிய காரணம்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்