ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியானது இன்று மஹேந்த ராஜபக்சா சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பாக சாரித் அசலங்கா 91 ரன்களையும், தனஞ்செயா டிசில்வா 51 ரன்களையும் குவித்து அசத்தினர். அதன் பின்னர் 269 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 46.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 269 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக மதீஷா பதிரானா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக அறிமுகமாகியிருந்தார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் பிரகாசிப்பார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இவ்வேளையில் அவர் அறிமுகமான இந்த முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதோடு இந்த போட்டியில் ஓரளவு சுமாராகவே பந்துவீசிய மதீஷா பதிரானா 8.5 ஓவர்களில் 66 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
இதையும் படிக்கலாமே: கோலியே இத என்கிட்டே சொன்னாரு. இந்த முறை ஆஸ்திரேலிய அணிக்கு அப்போ சம்பவம் இருக்கு. ரகசியம் பகிர்ந்த ரிக்கி
அவர் தொடர்ந்து டவுன் தி லெக் சைடில் பந்துகளை வீச அது அவருக்கு பலவீனமாகவே அமைந்தது. இதன் விளைவாக இரண்டாவது ஓவரில் சுமார் 17 ரன்களை அவர் வாரி வழங்கினார். ஆனால் முயற்சியை தளரவிடாமால் பதிரனா தனது இரண்டாவது ஸ்பெல்லில் ரஹ்மத் ஷாவின் விக்கெட்டை வீழ்த்தி தனது முதல் ODI விக்கெட்டை பதிவு செய்தார். என்னினும், அவரின் பந்து வீச்சு முதல் போட்டியில் எடுபடவில்லை என்றே கூறவேண்டும். இருப்பினும் இது முதல் போட்டி என்பதால் அதற்கான பதற்றம் அவரிடம் நிச்சயம் இருந்திருக்கும். ஆகையால் அடுத்தடுத்த போட்டிகளில் அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.