- Advertisement -
Homeவிளையாட்டுவீரர்கள் இல்லாத காரணத்தால் இந்திய அணியோடு மோதப்போகும் தோனியின் வளர்ப்பு பதிரனா.. இலங்கை அணியில் நேர்ந்துள்ள...

வீரர்கள் இல்லாத காரணத்தால் இந்திய அணியோடு மோதப்போகும் தோனியின் வளர்ப்பு பதிரனா.. இலங்கை அணியில் நேர்ந்துள்ள சோகம்..

- Advertisement-

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை தவிர அனைத்து அணிகளும் முன்கூட்டியே தனது வீரர்களை அறிவித்திருந்தது. வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மற்றும் இதர பிரச்சனைகளால் அந்த அணி தனது வீரர்களில் பட்டியலை தாமதமாக அறிவித்தது. ஆசியக் கோப்பை போட்டிகளில் அந்த அணியின் நான்கு முக்கிய வீரர்கள் பங்குபெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆசியக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தை வங்கதேசத்திற்கு எதிராக பல்லேகேலேவில் ஆகஸ்ட் 31ஆம் தேதி விளையாடுகிறது. அந்த அணி தனது இரண்டாவது ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 5 அன்று பாகிஸ்தானில் உள்ள லாகூரில் விளையாடுகிறது.

இலங்கை அணியில் நான்கு முக்கிய வீரர்களான வணிந்து ஹஸரங்கா, சமீரா, தில்ஷன் மதுஷாங்கே மற்றும் லஹிரு குமாரே ஆகியோர் வரவிருக்கும் ஆசிய கோப்பைகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது . இதனால் அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வணிந்து ஹஸரங்கா மற்றும் சமீரா ஆகியோரு இலங்கை பிரீமியர் லீக் தொடரின் விளையாடிய போது அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஹஸரங்காவிர்க்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. சமீராவை பொருத்தவரை மார்பு பகுதியில் ஏற்பட்ட வலியினால் அவர் ஆசியக் கோப்பை போட்டி மட்டுமில்லாமல் வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் பங்கு பெறுவது சந்தேகமான நிலையில் உள்ளது.

- Advertisement-

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது, அதில்: இலங்கை கிரிக்கெட் அணி தேர்வு குழு வரவிருக்கும் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியினை தேர்வு செய்துள்ளது. இதற்கு இலங்கை அணியின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கே அனுமதி வழங்கியுள்ளார். மேலும் இலங்கை அணியின் வீரர் குசால் பெரேரா ப்ளூ காய்ச்சலால் அவதியுற்ற நிலையில் தற்போது அதிலிருந்து குணமாகி வருகிறார். அவர் முழுவதுமாக குணமான பின்பு அவர் அணியில் இணைவார் எனக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நான்கு முக்கிய ஆட்டக்காரர்கள் அணியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதனால் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக அடிய மதீஷா பதிரனா, கசுன் ராஜித, பிரமோத் மதுஷன் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இதில் பத்திரன, மதுஷன் மற்றும் பெர்னாண்டோ ஆகிய மூவரும் ஆசிய கோப்பைக்கு முன்பு வெறும் 9 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியவர்கள் என்பது குறிப்பிடதக்கது. முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத காரணத்தால் இளம் வீரர்களுக்கு இது போன்ற முக்கிய போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

வணிந்து ஹசரங்க போட்டிகளில் பங்குகொள்ள முடியாத காரணத்தால் மகேஷ் தீக்க்ஷனா சுழற் பந்துவீச்சு துறையை தலைமையேற்று நடத்த இருக்கிறார். இலங்கை அணியின் கேப்டனாக தாசுன் ஷனகா செயல்பட இருக்கிறார். துஷான் ஹேமந்த மற்றும் துனித் வெல்லலகே ஆகிய சொஇன்னர்களும் இந்த அணியில் இடம்பெற்றுளளனர்.

அணி விவரம்:
தசுன் ஷனக (கேப்டன்), குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), பதும் நிஸ்சானக, திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்கா, சதீர சமரவிக்ரம, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, பி.கசுன் எப். , மற்றும் பிரமோத் மதுஷன்.

சற்று முன்