இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கவனிக்க வைத்த இளம் வீரராக உருவாகியுள்ளார் மதீஷா பதீரனா. மலிங்கா போன்ற ஆக்ஷனில் பந்து வீசும் 20 வயது வீரரான அவர் டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர்களாக வீசி ரன்களைக் கட்டுபடுத்துவதோடு மட்டுமில்லாமல் முக்கியமான விக்கெட்களையும் சாய்க்கிறார். அவரின் பவுலிங் ஆக்ஷன் காரணமாக அவரை ரசிகர்கள் அவரை குட்டி மலிங்கா என அழைக்கின்றனர்.
இந்த சீசன் முழுவதும் தோனியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அவருக்கு தோனி பல வழிகளில அறிவுரைகள் சொல்லி காட்பாதராக இருந்து வழிநடத்துகிறார். கடந்த குவாலிபையர் போட்டியில் அவரை பந்துவீச வைக்க வேண்டும் என்பதற்காக நடுவர்களிடம் பேச்சுவார்த்தை என்கிற பேரில் 5 நிமிடங்கள் வரை போட்டியை தாமதமாக்கினார்.
தோனி இவர் மேல் காட்டும் அக்கறையை பார்த்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே “இலங்கை அணிக்காக பதீரனா எனும் வைரத்தை தோனி பட்டை தீட்டி வருகிறார் “ என்று வர்ணனையின் போது பேசினார். பதீரனா பற்றி பேசியுள்ள தோனி “அவர் டி 20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நீண்டகாலம் உடல் தகுதியோடு விளையாடலாம்” என அறிவுரைக் கூறியுள்ளார்.
இந்நிலையில் பதீரனாவின் குடும்பத்தினர் சமீபத்தில் தோனியை சந்தித்துக் கொண்டு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் பதீரனாவின் சகோதரி விஷூகா பதிரனா. மேலும் தோனியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள அவர் “பதிரனா இப்போது தேர்ந்த கைகளில் இருக்கிறார் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தல தோனி எங்களிடம், பதிரனாவை பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை, அவருடன் எப்போதும் நான் இருக்கிறேன்” என கூறினார். இது எங்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. அதே சமயம் தோனியை சந்தித்ததைப் பற்றி “தோனியை சந்திப்பேன் என நான் கனவில் கூட நினைத்தது இல்லை” எனவும் வியந்து பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்கலாமே: பதிரனாவுக்கு வந்த கியூட் ப்ரோபோசல். அவரை இந்திய அணியில் ஆட வைக்க இளம் பெண் சொன்ன சூப்பர் திட்டம். பெரிய தலைங்க எல்லாம் இத நோட் பண்ணிக்கோங்கப்பா
புதிரான இலங்கை வீரராக இருந்தாலும், அவரை பலரும் இந்திய வீரரை போலவே நினைக்க துவங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை ரசிங்கர்கள், அவர்கள் தங்கள் சொந்த மண்ணின் மைந்தராகவே பார்க்க துவங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.