தோனி சொன்ன சீக்ரெட் இது… அவருக்காக என்னவேனா செய்யலாம்… இலங்கையிலும் தோனியின் புகழ் பாடும் பதிராணா

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கியவர் மதிஷா பதிராணா. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சில் தடுமாறிய போது மதிஷா பதிராணா தன்னுடைய அபாரமான செயல்பாட்டால் சென்னையின் குறையை நீக்கினார்.

தற்போது பதிரானா தோனியிடம் இருந்து கிடைத்த அனுபவத்தின் மூலம் டி20 கிரிக்கெட்டில் நட்சத்திர பவுலராக வலம் வருகிறார். கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடும் பதிராணா 12 விக்கெட் களை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட் கை வீழ்த்திய வீரர் என்று பெருமையை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பதிராணா, என்னைப் போன்ற இளம் வீரருக்கு யாரேனும் தோனி போன்ற ஜாம்பவான்கள் ஊக்கம் கொடுத்தால் நிச்சயம் அது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மேம்படுத்தும்.

தோனி போன்ற ஒரு நபர் என் மீது நம்பிக்கை வைத்தது தான் என் வெற்றிக்கு காரணம். இதன் மூலம் என்னால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளே இருக்கிறது. தோனியிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

- Advertisement -

முதலில் ஒருவரிடம் எப்படி பணிவாக நடந்து கொள்வது என்றே கற்றுக் கொண்டேன். இதன் காரணமாகத்தான் அவர் தற்போது வெற்றியாளராக வலம் வருகிறார். அவருக்கு வயது 42 ஆகிவிட்டது. இன்னும் உடலளவில் ஃபிட்டாக இருக்கிறார்.

அது என்னைப் போன்ற வீரர்களுக்கெல்லாம் நிச்சயம் ஊக்கத்தை கொடுக்கிறது. நான் முதன் முதலாக சென்னைக்கு சென்ற போது நான் ஒரு சிறுவனாக தான் இருந்தேன். என்னை யாருக்குமே தெரியாது.

சிஎஸ்கே அணி நிர்வாகம் தான் எனக்கு நல்ல பயிற்சியை கொடுத்தது பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர். தற்போது டி20 போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும். இருக்கும் நான்கு ஓவரில் எப்படி வீச வேண்டும் என்பதையும் நான் தோனியிடம் கற்றுக் கொண்டேன்.

எனது உடலை நான் பத்திரமாக பாதுகாத்து காயத்தில் இருந்து என்னை பாதுகாத்துக் கொண்டால் நான் எந்த அணிக்காக விளையாடுகிறானோ அவர்களுக்கு பல சாதனைகள் செய்ய முடியும் என்று தோனி எனக்கு கூறியிருக்கிறார் என பதிராணா தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்