பதிரனாவை பந்துவீசக் கூடாது என தடுத்த நடுவர்கள். இதனால் போட்டியையே நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட தோனி – என்ன நடந்தது? முழு விவரம்

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் குவாலிபையர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. அணியில் சிறப்பாக விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களிடம் இருந்து பெரிதாக ஸ்கோர் வரவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஆரவாரமான வரவேற்போடு களத்துக்கு வந்த தோனி 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

173 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சீரான இடைவெளியியில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தன. அதனால் சென்னை அணி பவுலர்கள் ரன்ரேட்டைக் கட்டுப்பாட்டில் வைக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பவுலர் பதிரனா இந்த போட்டியில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். முதலில் 12 ஆவது ஓவரை வீசிய அவர், ஓய்வெடுக்க டக் அவுட்டுக்கு சென்றார். பின்னர் அவர் களத்துக்கு வந்து 16 ஆவது ஓவரை வீச வந்த போது நடுவர்கள் அவர் பந்துவீச அனுமதிக்க முடியாது என கூறினார்.

- Advertisement -

அதற்குக் காரணம் என்னவென்றால் எந்தவொரு வீரரும் ஓய்வெடுக்க செல்லும் போது 8 நிமிடத்துக்குள் வந்துவிட்டால் அவர் தொடர்ந்து பந்துவீசலாம். ஆனால் பதிரனா 9 நிமிடங்கள் கழித்தே வந்தார். இதனால் அவர் 9 நிமிடங்கள் மீண்டும் பீல்ட் செய்தால் மட்டுமே அடுத்து ஓவர் வீச முடியும்.

நடுவர்களின் இந்த முடிவுக்கு எதிராக சிஎஸ்கே கேப்டன் தோனி, அவர்களிடம் சென்று வாக்குவாதம் செய்தார். சென்னை அணியின் அனைத்து வீரர்களும் வந்து நடுவர்களிடம் குழுமினார். தோனியின் ஒரு நிமிட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பதிரனா தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்பட்டார். இதனால் போட்டி இடையில் ஒரு நிமிட நேரம் தடைபட்டது.

- Advertisement -

சற்று முன்