இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் போட்டியானது தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. டெல்லி சார்பாக ரைலி ரூஸோ 82 ரன்களையும், ப்ரித்வி ஷா 54 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடி பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் பஞ்சாப் அணி பெற்ற இந்த தோல்வியின் மூலம் தற்போது பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல பிரமாதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய அணிகளில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மட்டுமே 12 போட்டிகளில் விளையாடியிருந்தது.
இவ்வேளையில் இரு அணிகளுக்குமே இந்த இரண்டு போட்டிகளின் வெற்றிகள் மிக முக்கியமாக தேவைப்பட்டது. ஆனால் தற்போது பஞ்சாப் அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் கூட அவர்களால் புள்ளி பட்டியல் 14 புள்ளிகளை தான் பெற முடியும். எனவே அவர்களின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.
இதையும் படிக்கலாமே: சி.எஸ்.கே ரசிகர்களுக்கு நன்றி கூறினால் ராசியே இல்லையா? என்னப்பா சொல்றீங்க? – கலங்கடிக்கும் சம்பவங்கள்!
அதே வேளையில் பெங்களூரு அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட நான்காவது இடத்திற்கான போட்டியில் நீடிக்கும். அதே போன்று இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் அவர்கள் பிளே ஆப் சுற்றிற்க்கு நேரடியாக தகுதி பெற்று விடுவார்கள் என்பதனால் தற்போது பஞ்சாப் பெற்ற தோல்வி ஆர்.சி.பி அணிக்கு பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பினை பிரகாசமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.