- Advertisement 3-
Homeவிளையாட்டுஆசிய கோப்பைக்கு முன்பு ரோகித் சர்மாவின் புகைப்படத்தை டிவிட்டரில் கவர் போட்டோவாக வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட்...

ஆசிய கோப்பைக்கு முன்பு ரோகித் சர்மாவின் புகைப்படத்தை டிவிட்டரில் கவர் போட்டோவாக வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்… மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள்…

- Advertisement 1-

இந்தியா பாகிஸ்தான் இலங்கை நேபாளம் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆசியக் கோப்பை போட்டியானது அடுத்த வாரம் ஆகஸ்ட் 30 அன்று தொடங்குகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடக்கவிருக்கிறது. எல்லாரும் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் செப்டம்பர் 2 அன்று கண்டியில் நடைபெற உள்ளது.

எதிர்வரும் மாதங்களில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் நான்கு முறை நேருக்கு நேர் மோத உள்ளனர். ஆசிய கோப்பையில் மூன்று முறை மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, அதுமட்டுமில்லாமல் அக்டோபர் 14 அன்று இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை போட்டியில் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் இரு அணிகளும் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் ஆசியக் கோப்பை போட்டிகளில் மற்ற அணிகள் ஆடும் ஆட்டத்தை விட இவ்விரு அணிகளாடும் ஆட்டம் பல பேரால் காணக்கூடும். இந்திய அணியை பொறுத்தவரை கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் வருகையால் பேட்டிங்கிலும் , ஜாஸ்பிரித் பும்ராவின் வருகையால் பௌலிங்கிலும் பலம் பெற்றுள்ளது. இந்திய அணியை போலவே பாகிஸ்தான் அணியும் முழு பலத்துடன் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் களமிறங்கவுள்ளது.

ஆசியக் கோப்பை முழுவதும் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மறுத்தது. இதன் காரணமாக பாகிஸ்தானில் இந்திய அணி ஆட வேண்டிய ஆட்டங்கள் அனைத்தும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இந்த முடிவால் பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இடையே இருந்த பதற்றம் தணிந்தது

- Advertisement 2-

போட்டியை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தன்னுடைய twitter கவர் ஃபோட்டோவில் ஆசிய கோப்பையில் பங்குபெறும் நேபால்,பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா, இலங்கை ஆகிய கேப்டன்கள் அனைவரும் ஒரு சேர இருக்கும்படி கிராபிக்ஸசில் எடிட் செய்து வைத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் கவர் போட்டோவில் ரோகித் சர்மாவின் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரை அயர்லாந்தில் டி20 தொடரில் பங்கேற்க்க சென்றிருந்தது அதில் சில வீரர்கள் இந்தியாவிற்கு வர வேண்டியுள்ளது, அயர்லாந்தில் நடைபெற்ற டி20யில் பங்குபெறாத வீரர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர், அவர்கள் அனைவருக்கும் யோயோ டெஸ்ட் முடிவடைந்த நிலையில் கூடிய விரைவில் இலங்கைக்கு செல்ல உள்ளனர்.

சற்று முன்