இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பு பிரேமதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், நேற்றைய நாளின் ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்டது.
இதன்பின் இந்த ஆட்டம் ரிசர்வ் டேவான இன்று தொடரவுள்ளது. அதேபோல் முதல்முறையாக இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க மைதானத்தில் ரசிகர்கள் சிறியளவில் கூட திரளவில்லை. மைதானத்தின் அனைத்து பக்கமும் ரசிகர்கள் இல்லாமல் காத்து வாங்கியது. இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்திற்கா இந்த நிலை என்று ரசிகர்கள் பலரும் புலம்பினர்.
இதற்கான காரணம் குறித்து இலங்கை முன்னாள் வீரர் முரளிதரன் கூறும் போது, ஆசியக் கோப்பையை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் டிக்கெட் கட்டணங்களை நிர்ணயிக்கும். தற்போதைய சூழலில் இலங்கை மக்கள் பொருளாதார சிக்கலில் உள்ளனர். ஆனால் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.6 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது.
சிறப்பான அரங்குகளில் இருந்துபார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ரூ.50 ஆயிரம் அவரை செலவு செய்ய வேண்டும். அது இலங்கை மக்களுக்கு ஒரு மாத குடும்ப செலவு. அதனால் தான் மக்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையான விமர்சிக்கின்றனர்.
ரசிகர்கள் நேரில் பார்க்க ஆர்வம் காட்டாததால் கடைசி நேரத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளுக்கானடிக்கெட் கட்டணம் ரூ.500 முதல் ரூ.1000மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டம் தொடங்கியதால், அதனைகூட வாங்க யாரும் முயற்சிக்கவில்லை. முன்னதாக பல்லக்காலேவிலும் இதே நிலை தான் இருந்தது.
அதேபோல் கொழும்புவில் பெய்து வரும் கனமழையும் ரசிகர்கள் வராததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வானிலை மோசமாக இருப்பதால், இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்காது என்றே பலரும் கருதி வருகின்றன்ர். அதற்கேற்ப நேற்றைய ஆட்டத்தில் மழை பெய்து ஆட்டத்தின் முதல் நாள் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.Mu