- Advertisement -
Homeவிளையாட்டுஅந்த 36 வயசு வீரருக்கு முன்னாடி தோனி ரிட்டயர்டு ஆயிடுவாரு.. மும்பை இந்தியன்ஸ் வீரரே சொன்ன...

அந்த 36 வயசு வீரருக்கு முன்னாடி தோனி ரிட்டயர்டு ஆயிடுவாரு.. மும்பை இந்தியன்ஸ் வீரரே சொன்ன தகவல்..

- Advertisement-

தற்போது 43 வயதாகும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு சீசனில் ஆடினால் கூட பெரிய விஷயமாக மாறும் என தெரிகிறது. ஆனால் அவரது ரசிகர்களோ தோனி குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஐபிஎல் தொடர்களிலாவது ஆட வேண்டும் என்று தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே தோனி ஒவ்வொரு ஐபிஎல் சீசனில் மேலும் ஆடுவாரா மாட்டாரா என்பது மிகப்பெரிய ஒரு விஷயமாக இருந்து வரும் நிலையில் 2025 ஆம் ஆண்டு அவர் ஆடுவது நிச்சயம் ஒரு நெருக்கடியான சூழலில் தான் உள்ளது. இந்திய அணி கண்ட முக்கியமான கேப்டன்களில் ஒருவராக இருந்த தோனி, சிஎஸ்கே அணியை கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரைக்கும் வழி நடத்தி வந்தார்.

- Advertisement -

இதனிடையே இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ருத்துராஜை புதிய கேப்டனாகவும் அவர் அறிவிக்க விரைவில் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வினை பெற்று விடுவார் என அனைவரும் கருதினர். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் ஆடி இருந்த தோனி, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்றால் மெகா ஏலத்துக்கு முன்பாக அறிவிக்கப்படும் சில விதிகள் அவருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது..

அப்படி இல்லாமல் போனால் தோனி சிஎஸ்கே அணியில் இடம் பெறாமல் கூட போகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தது. ஆனால் என்னதான் நடந்தாலும் நிச்சயம் சிஎஸ்கேவுக்காக ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த தோனியை அவர்கள் எளிதில் விட்டு விட மாட்டார்கள் என்றும் ஏதாவது ஒரு காரணத்தின் பெயரில் அவரை தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் சிஎஸ்கே நிர்வாகத்தினர் மேற்கொள்வார்கள் என்றும் தெரிகிறது.

- Advertisement-

இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா ஒரே வார்த்தையில் பதில் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி உள்ள பியூஷ் சாவ்லா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம், தோனி அல்லது சாவ்லா ஆகி இருவரில் யார் முதலில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட சாவ்லாவே வேடிக்கையாக “எம். எஸ். தோனி” என்ற பதிலை தெரிவித்துள்ளார்.

தற்போது 36 வயதாகும் பியூஷ் சாவ்லா இன்னும் ஒரு சில சீசன்கள் ஆடினாலும் தோனி அதற்கு முன்பே ஓய்வை அறிவிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை தான் தனது பதிலில் வேடிக்கையாக பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

சற்று முன்