இவர எதுக்கு டீம்ல எடுத்தாங்க.. ஏன் யாருமே இத கேள்விகேட்ட மாட்டேங்கறீங்க.. நட்சத்த்திர வீரரின் தேர்வு குறித்து பியூஸ் சாவ்லா கருத்து

- Advertisement -

இந்தியாவில் அடுத்த மாதம் அக்டோபர் 5ம் தேதி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ரோகித் ஷர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்குழு நேற்று அறிவிக்கப்பட்டது. திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணாவை தவிர்த்து ஆசிய கோப்பை தொடரில் இடம்பெற்ற வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், கே.எல்.ராகுலும், நான்காவது வரிசைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அதற்கு பேக்கப் வீரராக சூர்யகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணி அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே கிரிக்கெட் நிபுணர்கள் பலர் தங்களது பிளேயிங் 11 இதுதான் என கருத்து தெரிவித்துவருகின்றனர்.

- Advertisement -

அதேசமயம் கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இவர்களில் யார் விக்கெட் கீப்பராக இருக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காயத்திலிருந்து கே.எல்.ராகுல் மீண்டு வந்திருந்தாலும், ஆசிய கோப்பை தொடரின் முதல் இருபோட்டிகளில் விளையாடவில்லை. மறுமுனையில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடி 82 ரன்கள் அடித்ததன் மூலம் இஷான் கிஷன் தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இதனால் கே.எல்.ராகுலுக்கு பதிலாக அணியில் இஷான் கிஷன் இடம்பெற வேண்டும் என்ற குரல் தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வுசெய்யப்பட்டது குறித்தும் கேள்வி கேட்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில், கே.எல்.ராகுல் இருக்க வேண்டுமா அல்லது இஷான் கிஷன் இருக்க வேண்டுமா என நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஏன் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. டாப் ஆர்டரில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடியதால் அவரை ரீசர்வ் வீரராக அணியில் வைத்திருக்க முடியாது.

மேலும் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் எப்படி பேட்டிங் செய்வார் என ரசிகர்கள் பலருக்கும் கேள்வி இருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான கடினமான சூழ்நிலையில் அவர் சிறப்பாக ஆடினார். அவர் நல்ல ஃபார்மில் இருப்பதோடு மட்டுமில்லாமல், மிடில் ஆர்டரில் இடதுகை பேட்டர் வேண்டும் என்ற தேவையை பூர்த்தி செய்வார். அதனால் அவர் அணியில் நிச்சயம் இடம்பெற வேண்டும்.

கே.எல்.ராகுலை பற்றி நாம் பேசினால், அவரது பேட்டிங் சாதனை மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் அவர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றார். மேலும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா சென்னை, லக்னோ மைதானங்களில் விளையாடும்போது நிச்சயம் இஷான் கிஷன் ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பராக தேர்வு செயப்பட வேண்டும். கே.எல்.ராகுல், இஷான் கிஷன் தேர்வு எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் அணியில் இடம்பெற்றார் என்பது நிச்சயம் கேள்வி எழுப்பக்கூடிய ஒரு விடயம் தான் என பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

இஷான் கிஷன் கடைசியாக ஆடிய நான்கு ஒருநாள் போட்டிகளிலும் அரை சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். தற்போது கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் இவர்களில் யார் உலகக்கோப்பையில் உறுதியாக விளையாட போகிறார்கள், இஷான் கிஷன் – கே.எல். ராகுல் இவர்களில் யார் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவர் என்ற கேள்விக்கு சூப்பர் 4 சுற்றில் பதில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிரியாது.

- Advertisement -

சற்று முன்