- Advertisement 3-
Homeவிளையாட்டுடி20ல் ஒதுங்கிய ரவீந்திர ஜடேஜா.. அவரது இடத்தில் ஆட வாய்ப்புள்ள வீரர்கள் யார்.. ரசிகர்கள் விரும்பும்...

டி20ல் ஒதுங்கிய ரவீந்திர ஜடேஜா.. அவரது இடத்தில் ஆட வாய்ப்புள்ள வீரர்கள் யார்.. ரசிகர்கள் விரும்பும் பட்டியல்..

- Advertisement 1-

இந்திய அணி உலக கோப்பை வென்றதை நினைத்து ரசிகர்கள் இன்னும் உற்சாகத்தில் திளைத்து வந்தாலும் ஒரு சில மாற்றங்கள் அந்த அணியின் நிகழப்போவதைப் பற்றியும் பரவலாக கருத்துக்கள் இருந்து வருகிறது. இந்திய அணி டி 20 உலக கோப்பை கைப்பற்றிய மறுகணமே விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்று பேசி இருந்தபோது டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார்.

இவரை போலவே ரோஹித் ஷர்மாவும், அவரை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் டி20 சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். டி20 தொடரில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பினை வழங்குவதற்காக இந்த முடிவை அவர்கள் அனைவருமே எடுத்திருந்த நிலையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிகிறது.

இப்படி மூன்று பேரும் அடுத்தடுத்து இந்திய அணியின் டி20 போட்டிகளில் இருந்து விலகி இருக்க, இதற்கு காரணம் கம்பீர் தான் என ஒரு பரபரப்பு கருத்து வெளியாகி இருந்தது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக விரைவில் அறிவிக்கப்படுவார் என்ற சூழ்நிலையில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தனித்தனியாக அணியை உருவாக்க விரும்புவதாகவும் பிசிசிஐயிடம் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியானது.

அப்படி வரும் பட்சத்தில் டி20 போட்டிகளில் இளம் இந்திய வீரர்களுக்கு தான் கம்பீர் நிச்சயம் முன்னுரிமை கொடுப்பார் என தெரிகிறது. அதனால் கோலி, ரோஹித், ஜடேஜா என மூன்று பேரும் தற்போது அவர்களாக வழிவிட்டு இருப்பதாகவும் ஒரு அரசல் புரசலான கருத்துக்களும் வைரலாகி வருகிறது.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில் ஜடேஜாவுக்கு பதிலாக டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். அவரைப் போலவே பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் கலக்கும் குர்னால் பாண்டியா சிறந்த தேர்வாக இருப்பார். ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பி வரும் இவர் இந்திய அணியில் பெரிதாக ஆடியது கிடையாது.

இவரை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர், நிச்சயம் ஜடேஜாவுக்கு சிறப்பான மாற்று வீரராக இருப்பார். தொடக்க வீரராகவும் களமிறங்கி ஆடக்கூடிய திறன் படைத்த வாஷிங்டன் சுந்தர், சுழற்பந்திலும் மாயாஜாலம் செய்யக்கூடியவர். இவர்கள் இருவரையும் தாண்டி யாரையாவது யோசிக்க வேண்டும் என்றால் நிச்சயம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய ராகுல் தெவாட்டியாவின் மீதும் பிசிசிஐ பார்வை போவதற்கான வாய்ப்புள்ளது.

இவை அனைத்தையும் தாண்டி அனுபவம் குறைவாக இருக்கும் இளம் வீரரே போதுமென்றால் சென்ற ஐபிஎல் தொடரில் கலக்கியிருந்த ஹைதராபாத் வீரர் நித்திஷ் ரெட்டி உள்ளிட்ட வீரர்களுக்கும் ஜடேஜா இடத்தில் வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்