- Advertisement -
Homeவிளையாட்டுஆர்சிபியை விட்டு வெளியேறி, சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையில் விளையாடி ஐபிஎல் பட்டத்தை வென்ற 3...

ஆர்சிபியை விட்டு வெளியேறி, சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையில் விளையாடி ஐபிஎல் பட்டத்தை வென்ற 3 வீரர்கள்

- Advertisement-

ஐபிஎல் வரலாற்றில் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு ஆதரவினை பெற்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் முக்கிய அடையாளமாக எம்.எஸ்.தோனியும், பெங்களூரு அணியின் முக்கிய அடையாளமாக விராட் கோலியும் பார்க்கப்படுகின்றனர். ஆனால் சிஎஸ்கே அணியை காட்டிலும் பெங்களூரு அணி ஆண்டுதோறும் மோசமான நிலையை எட்டி ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை கைப்பற்றாமல் இருந்து வருகிறது.

இதுவரை மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள பெங்களூரு அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அதே வேளையில் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை இறுதிப் போட்டிக்கு சென்ற அணியாக திகழும் சென்னை அணியானது 10 முறை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அந்த வகையில் பெருமளவு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் கோப்பையை வெல்லாத அணியாக பார்க்கப்படும் பெங்களூரு அணியில் விளையாடிய ஒரு சில வீரர்கள் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை அணிக்கு வந்ததும் கோப்பையை வென்றிருக்கிறார்கள். அப்படியான மூன்று வீரர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1) ஷேன் வாட்சன் : கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வாட்சன் அந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய மதிப்பில் 9.5 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் 2016-ஆம் ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. அதேபோன்று 2017-ஆம் ஆண்டும் அவருக்கு மோசமாகவே அமைய வாட்சன் அந்த ஆண்டு பெங்களூரு அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.

- Advertisement-

அப்படி பெங்களூரு அணியிலிருந்து வெளியேறிய அவரை சென்னை அணி 2018-ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் எடுத்தது. அப்படி சென்னை அணிக்கு மாறியதுமே வாட்சன் அந்த தொடரில் 15 போட்டியில் 555 ரன்கள் அடித்ததோடு மட்டுமின்றி அந்த தொடரின் இறுதி போட்டியில் சதம் அடித்தும் அசத்தியிருந்தார். அந்தத் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பின்னர் 2020 ஆம் ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

2) கேதார் ஜாதவ் : 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஜாதவ்வை 2018 ஆம் ஆண்டு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. கேதர் ஜாதவ் பெங்களூரு அணியில் இருந்து வெளியேறிய பின்னர் சென்னை அணிக்கு வந்ததும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் பெற்ற அணியில் இருந்தார். 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடிய அவர் கடந்த ஆண்டு மீண்டும் பெங்களூரு அணியில் மாற்றுவீரராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3) ஷிவம் தூபே : பெங்களூரு அணியில் இருந்து வெளியேறிய பின்னர் மிகப்பெரிய வீரராக உருவெடுத்துள்ள வீரர்களில் இவரும் ஒருவர். கடந்த 2019 ஆம் ஆண்டு 5 கோடி என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர் அந்த அணியில் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை என்ற காரணத்தினால் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் ராஜஸ்தான் அணிக்கு சென்று அங்கும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத வேளையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய அற்புதமான பங்களிப்போடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னையை அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்