வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் 20 போட்டி தொடரில் 12ஆவது ஆட்டம் ஆனது செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பற்றியொட்ஸ் அணிக்கும் ட்ரின்பாக்கோ நைட் ரைடர் அணிக்கும் எதிராக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ட்ரின்பாக்கோ நைட் ரைடரஸ் ஆணி செயின்ட் கிட்ஸ்அண்ட் நேவிஸ் பற்றியொட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
செயின்ட் கிட்ஸ் அண்ட் பற்றியொட்ஸ் அணி 20 ஓவர்களில் 178 ரன்களை எடுத்தது. அதன் தொடக்க வீரர்கள் ஏவின் லெவிஸ் 10 ரன்களும், அண்ட்ரெவ் பிளெட்சர் 32 ரன்களும் எடுத்தனர். அதன் பிறகு களம் இறங்கிய ஜோசுவா டி சில்வா 18 ரன்களும் கிட் கூலி 11 ரன்களும் ஷெர்பான் ருத்தேர் போர்ட் 62 ரன்களும், கோர்பின் போஸ்ச் 30 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ட்ரிம்பாகோ நைட் ரைடர்ஸ் தனது ஆட்டத்தை தொடங்கியது.
இதன் தொடக்க ஆட்டக்காரர்கள் சாட்விக் வால்டன் ஆறு ரன்களிலும் மார்டின் குப்தில் ஏழு ரன்களிலும் ஆட்டமிழக்க அதன் பிறகு களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் 32 பந்துகளில் 61 ரன்கள் விளா சினார், லார்க்கன் டக்கர் 36 ரன்களும்,ஆண்ட்ரே ரசல் 23 ரன்களையும், கேப்டன் கிரான்பொல்லார்ட் 37 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர்.
இந்த ஆட்டத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீச தவறியதால அந்த அணிக்கு ரெட் கார்ட் பெனால்டி வழங்கப்பட்டது. இதனால் அந்த அணியின் கேப்டனான கிரான் பொல்லார்ட் அவரது அணி வீரரான சுனில் நரேனை களத்தை விட்டு வெளியேற்றினார். நரேன் இந்த ஆட்டத்தில் 24 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கிரான் பொல்லார்ட் பதினைந்தாவது ஓவரில் தொடர்ச்சியான நான்கு சிக்ஸர்களை விளாசிஅசத்தினார். கேப்டன் கிரான் பொல்லார்ட் பதினாறு பந்துகளில் 37 ரன்களை அதிரடியாக அடித்ததால் அந்த அணி 17 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் கிரான் பொல்லார்ட் அடித்த நான்கு சிக்ஸர்களும் 100 மீட்டர் தூரத்துக்கு சென்றது. நவீத் ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் விளாசியது பொல்லார்ட்டின் பலம் மற்றும் திறமையை வெளிக்குணர்வதாக இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த நவீத் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.