- Advertisement 3-
Homeவிளையாட்டுயுவராஜ் சிங், ரோஹித் மாதிரி.. ஒரே ஓவரில் 36 ரன்கள் சேர்த்த பூரன் - சார்லஸ்.....

யுவராஜ் சிங், ரோஹித் மாதிரி.. ஒரே ஓவரில் 36 ரன்கள் சேர்த்த பூரன் – சார்லஸ்.. ஆப்கானிஸ்தானை சின்னாபின்னமாக்கிய வெ. இ..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றின் கடைசி போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த இரண்டு அணிகளும் டி 20 உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த சில ஐசிசி தொடர்களுக்கு தகுதி பெறாமலே தவித்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை பட்டையை கிளப்பி வரும் நிலையில் அவர்களின் நாட்டில் வைத்தும் போட்டிகள் நடைபெறுவதால் நிச்சயம் அதனை மிகப்பெரிய சாதகமாக மாற்றி கோப்பையை கைப்பற்றவும் முனைவார்கள் என தெரிகிறது.

அதே போல ஆப்கானிஸ்தான் அணியும் கத்துக்குட்டி என பெயர் எடுத்து வந்த நிலையில் தற்போது நியூசிலாந்து உள்ளிட்ட பெரிய அணிகளுக்கே கடும் சவாலாக தான் விளங்கி வருகின்றனர். இதற்கு மத்தியில் தான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தங்களின் கடைசி லீக் போட்டியில் சந்தித்திருந்தனர்.

அப்படி இருக்கையில் இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பவர் பிளே ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் டி 20 உலக கோப்பை போட்டிகளை பவர்ப்ளே ஓவர்களில் அதிக ரன்கள் சேர்த்த அணி என்ற பெருமையையும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளது. இன்னொரு புறம் ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்ட அனைவருமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

நிக்கோலஸ் பூரன் அரைச்சதத்தை கடந்திருக்க, சார்லஸ் 43 ரன்களில் அவுட் ஆகி இருந்தார். 14 ஓவர்களில் 140 ரன்களையும் கடந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த போட்டியில் மிக முக்கியமான மைல்கல்லையும் எட்டி உள்ளது. மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் சேர்த்திருந்த போது நான்காவது ஓவரை வீசுவதற்காக வந்தார் அஸ்மத்துல்லா ஓமர்சாய். இந்த ஓவரின் முதல் பந்து சிக்சர் பறக்க, இரண்டாவது பந்து நோபாலாக அறிவிக்கப்படுவதுடன் ஃபோருக்கும் சென்றிருந்தது.

- Advertisement 2-

தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கப்பட, மொத்தம் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு ஃபோர்களுடன் வைடு, நோபால் என சேர்த்து 36 ரன்கள் இந்த ஓவரில் சேர்க்கப்பட்டிருந்தது. பூரான் மற்றும் சார்லஸ் ஆகிய இருவருமே இதில் தங்களின் பங்களிப்பை அளிக்க, ஐந்தாவது முறையாக டி20 சர்வதேச போட்டிகளில் ஒரே ஓவரில் 36 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களின் ஓவரில் கிடைக்கும் போதெல்லாம் ரன்களை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குவிக்க, 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 218 ரன்களை எடுத்திருந்தது. நிக்கோலஸ் பூரன் சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும் கடைசி ஓவரில் 98 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்