- Advertisement -
Homeவிளையாட்டுஇந்த ஒரு விஷயத்துக்காகவே.. மும்பைல ரோஹித் ஆடணும்.. நண்பர் பிரக்யான் ஓஜா சொன்ன எமோஷனல் காரணம்..

இந்த ஒரு விஷயத்துக்காகவே.. மும்பைல ரோஹித் ஆடணும்.. நண்பர் பிரக்யான் ஓஜா சொன்ன எமோஷனல் காரணம்..

- Advertisement-

தோனி சிஎஸ்கே அணிக்காக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவாரா மாட்டாரா என்பது பற்றி ஒரு பக்கம் பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிறது. இதே போலத்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பல ஆண்டுகள் செயல்பட்ட ரோஹித் சர்மா அடுத்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடுவாரா மாட்டாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக தான் உள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் அவரை கேப்டன் பதவியில் இருந்து மாற்றிய போது ரோஹித் ஷர்மா ரசிகர்கள் உடைந்தே போய்விட்டார்கள் என்றே சொல்லலாம். பத்து ஆண்டுகள் இடைவெளியில் ஐந்து கோப்பையை வென்று கொடுத்த போதும் அவரை கேப்டன் பதவியில் இருந்து மாற்றியது ரசிகர்களை கலங்க வைத்திருந்தது. இதனால் ரோஹித் மும்பை அணியில் இடம்பெறக்கூடாது என ஆவேசத்துடன் பலரும் தெரிவிக்க தொடங்கி விட்டனர்.

- Advertisement -

ஆனாலும் அவர் மும்பை அணிக்காக கொடுத்த பங்களிப்பின் காரணமாக நிச்சயமாக அவரை தொடர்ந்து தக்க வைக்கும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு புறம் ரோஹித் ஷர்மா சீனியர் வீரராக இருப்பதால் அவரை மும்பை அணி விடுவித்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ரோஹித் விஷயத்தில் மும்பை இந்தியன்ஸ் என்ன முடிவெடுக்கும் என்பதை அறிவிப்பது வரை இப்படி பல வதந்திகளும் நிச்சயம் இணையத்தில் வலம் வரும் என்றே தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் ரோஹித்தின் நண்பரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் நான்கு ஆண்டுகள் இணைந்து ஆடிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“எனக்கு தெரிந்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாகவே ரோஹித் ஷர்மா இருந்து வருகிறார். மும்பை அணி அத்தனை எளிதில் ரோஹித் ஷர்மாவை விடுவிக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி நடந்தால் அது ரோஹித் சர்மாவுக்கு மிக எமோஷனல் தருணமாக இருக்கும்.
ஆனால் ஐபிஎல் தொடரில் இருந்து இந்த ஏலம் குறித்து நாம் ஒரு தொழில்முறையாக பேசும்போது சில முடிவில் தீர்மானம் எடுக்க வேண்டியது இருக்கும் .

இதனால் இப்போது இந்த முடிவு கடினமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அது மிக மிக மோசமான தருணம் எமோஷனல் ஆனதும் கூட. ஒருவேளை மும்பை அணி அவரை ரோஹித் ஷர்மாவை விடுவித்தால் நிச்சயம் அது எளிதான முடிவாக இருக்காது. ரோஹித் ஷர்மா தொடர்ந்து மும்பை அணிக்காக ஆட வேண்டும் என்று தான் நான் கூறுவேன். மும்பை அணிக்காக அவரை கொடுத்த பங்களிப்பு மிக பெரிது.

அத்துடன் ஒரு கேப்டனாக ஒரு சிறந்த வீரராக ரோஹித் ஷர்மா இன்று இருக்கும் இடம் ஏதோ ஒரு விதத்தில் மும்பை அணியுடன் தொடர்பில் உள்ளது. இதனால் அவர் மும்பை அணியில் தொடர்வது நல்ல முடிவாக இருக்கும். அதையும் தாண்டி அவர் விடுவிக்கப்பட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் உள்ள அணி என்ன வரும் போது இது போன்று ஏதாவது நடப்பதை நான் தடுக்க முடியாது” என பிரக்யன் ஓஜா கூறியுள்ளார்.

சற்று முன்