- Advertisement -
Homeவிளையாட்டுதோனிய கம்பீர் விமர்சிச்சது கரெக்ட் தான்.. பழைய விஷயத்தை தோண்டி பிரச்சனைய தொடங்கி வெச்ச பிரவீன்...

தோனிய கம்பீர் விமர்சிச்சது கரெக்ட் தான்.. பழைய விஷயத்தை தோண்டி பிரச்சனைய தொடங்கி வெச்ச பிரவீன் குமார்..

- Advertisement-

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தோனி தலைமையில் ஒரு நாள் உலக கோப்பை தொடரை வென்றதை அவ்வளவு எளிதில் ரசிகர்களால் மறந்துவிட முடியாது. அப்படி ஒரு முக்கிய தருணமாக கிரிக்கெட் அரங்கில் பார்க்கப்படும் நிலையில், இன்றளவிலும் கூட ஏப்ரல் 2 ஆம் தேதி வந்து விட்டால் முதலில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது உலக கோப்பையை சச்சின் கையில் கொடுத்து இந்திய வீரர்கள் அழகு பார்த்த தருணம் தான்.

1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர், அதனை மீண்டும் ஒரு முறை தொட்டு பார்க்கும் வாய்ப்பு, 2011 ஆம் ஆண்டு தான் கிடைத்திருந்தது. சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், முனாஃப் படேல் என இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அனைவருமே மிக சிறப்பாக ஆடியதால் தான் இந்திய அணி கோப்பையை வெல்லவும் வாய்ப்பு அமைந்திருந்தது.

ஆனால், அப்படி அனைவரது ஆட்டமும் தான் இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தாலும், இலங்கை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து முடித்து வைத்ததை தான் இன்று வரையிலும் பலரும் ஞாபகம் வைத்துள்ளார்கள்.

அதே போல மற்ற போட்டிகளில் ஆடாமல் இருந்த தோனி கடைசிப் போட்டியில் தான் ரன் அடித்து இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு பங்காற்றி இருந்தார். ஆனால் தோனியை மட்டுமே பலரும் ஹீரோ போல பார்த்துவிட்டு மற்ற வீரர்கள் செய்ததை மறந்து விட்டார்கள் என ஏற்கனவே பலரும் குற்றஞ்சாட்டி இருந்தனர். அந்த வகையில் அதே போட்டியில் சிறப்பாக ஆடி இருந்த கம்பீர் பற்றி கூட பலரும் பேச மறந்து விட்டனர்.

- Advertisement-

இது பற்றி ஒரு முறை பேசியிருந்த கம்பீர், இந்தியாவில் உள்ள அனைவருமே இந்த ஹீரோ வழிபாடு என்ற விஷயத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் கம்பீரின் கருத்து சரிதான் என தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரவீன் குமார் குறிப்பிட்டுள்ளார்.

“கௌதம் கம்பீர் சொன்னது சரியான விஷயம் தான். இது மல்யுத்தமோ அல்லது வேறு தனி நபர் ஆடும் விளையாட்டோ கிடையாது. ஒரு நபர் உங்களுக்காக வெற்றி பெற்று தர முடியாது. யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதே போல நிறைய ரன்களையும் அவர் எடுத்திருந்தார். 21 விக்கெட்டுகளை ஜாகீர்கான் எடுக்க, கௌதம் கம்பீர் 2007 மற்றும் 2011 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நிறைய ரன்கள் அடித்திருந்தார்.

ஒரு அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தாலோ அல்லது இரண்டு பந்துவீச்சாளர்கள் நிறைய விக்கெட்டுகளை எடுத்தாலோ தான் ஒரு அணியால் வெற்றி பெற முடியும். அது டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி 20 என எதுவாக இருந்தாலும் சரி. ஒரு வீரர்களால் மட்டும் உங்களால் ஒரு சுற்றுப்பயணத்தில் வெற்றி பெற்று தர முடியாது.

இந்திய கிரிக்கெட்டில் ஹீரோ கலாச்சாரம் பல்லாண்டுகளாகவே இருந்து வருகிறது. இது ஒரு தவறான நோக்கமாகும். எந்த வீரருக்கு பிராண்ட் ஆதரவு அதிகமாக இருக்கிறதோ அவர்தான் மிகப்பெரிய அளவில் பிரபலமும் அடைவார்கள்” என பிரவீன் குமார் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்