- Advertisement -
Homeவிளையாட்டு36 ரன்களில் ஆல் அவுட்.. அந்த மேட்ச்ல நாங்க செஞ்ச பெரிய தப்பு.. அது திரும்பி...

36 ரன்களில் ஆல் அவுட்.. அந்த மேட்ச்ல நாங்க செஞ்ச பெரிய தப்பு.. அது திரும்பி நடந்துடவே கூடாது.. எச்சரித்த புஜாரா..

- Advertisement-

இந்திய அணி கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்திருந்தாலும் ஒரு டெஸ்டில் இந்திய அணி படு மோசமாக தோற்றதை நிச்சயம் எத்தனை நாட்கள் ஆனாலும் மறந்துவிட முடியாது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி இருந்தது.

இது பகலிரவு ஆட்டமாக நடைபெற்றிந்த நிலையில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களையும், ஆஸ்திரேலிய அணி 191 ரன்களையும் எடுத்திருந்தது. தொடர்ந்து, 2 வது இன்னிங்சை ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு பேரிடியே காத்திருந்தது. வெறும் 36 ரன்களில் ஆல் அவுட்டானதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களின் குறைந்தபட்ச ஸ்கோரையும் இந்திய அணி பதிவு செய்திருந்தது.

இதன் பின்னர் மற்ற சில போட்டிகளில் வென்று இந்திய அணி அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி சரித்திரம் படைத்தாலும் 36 ரன்களில் அடிலெய்டு மைதானத்தில் ஆல் அவுட்டானது, இன்றளவிலும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு வடுவாக தான் உள்ளது. அப்படி ஒரு சூழலில் நான்கு ஆண்டுகள் கழித்து அதே அடிலெய்டு மைதானத்தில் அதே போன்று பகலிரவு போட்டியை இந்திய அணி ஆடவுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டை வெற்றியுடன் தொடங்கியிருந்தாலும் அவர்கள் பகல் இரவு போட்டியில் பிங்க் பந்தை எதிர்த்து அதிகம் ஆடியதில்லை என்பது ஒரு பாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. 36 ரன்களில் ஆல் அவுட்டாகிய இந்திய அணி பரிதாபத்தை சந்தித்த அதே மைதானத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் களமிறங்க உள்ளது.

- Advertisement-

அப்படி ஒரு சூழலில் 36 ரன்களில் ஆல் அவுட்டான போது இந்திய அணியில் இடம் பிடித்த நட்சத்திர வீரர் புஜாரா அந்த போட்டி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். “முதல் இன்னிங்சில் போட்டி எங்கள் பக்கம் தான் இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் தான் வெறும் ஒன்றரை மணி நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் நாங்கள் இழந்து விட்டோம்.

அந்த நேரத்தில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யாமல் போக ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். எங்கள் கிரிக்கெட்டில் மிக கடினமான நாளாகவும் அது மாறிவிட்டது. நிச்சயம் அது திரும்பி நடக்காது என்றும் நம்புகிறேன். மேலும் அந்தப் போட்டியில் நாங்கள் மாறி மாறி உரையாடி திட்டம் போடும் சூழலும் உருவாகவில்லை. அதிலிருந்து வெளியே வர 24 முதல் 48 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொண்டது.

ஆனால், அதே நாளில் இந்திய வீரர்கள் இணைந்து டின்னருக்கு போன போது அந்த போட்டி பற்றி எதுவும் பேசாமல் வேடிக்கையாக மற்ற பல விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டோம். அடுத்த நாளில் பயிற்சிக்கு திரும்பிய போது தான் அது பற்றி பேசினோம்” என புஜாரா கூறியுள்ளார்.

சற்று முன்