- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவரால நிக்கக் கூட முடியல.. இந்திய அணியை காப்பாத்த அஸ்வின் எடுத்த ரிஸ்க்.. பல வருஷம்...

அவரால நிக்கக் கூட முடியல.. இந்திய அணியை காப்பாத்த அஸ்வின் எடுத்த ரிஸ்க்.. பல வருஷம் கழிச்சு தெரிஞ்ச உண்மை..

- Advertisement 1-

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான வீரராக சமீப காலமாக இருந்து வருபவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரை 99 டெஸ்ட் போட்டியில் ஆடி உள்ள அஸ்வின், 500 விக்கெட்டுகளை கடந்துள்ளதுடன் மட்டுமில்லாமல் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை எட்டிய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையும் படைத்திருந்தார்.

மேலும் சமீபத்தில் ஆரம்பமாகி இருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை வென்று விட்டது. அப்படி இருக்கும் நிலையில் இரு அணிகள் மோத உள்ள ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட் போட்டி ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரம்சாலாவில் நடைபெற உள்ள இந்த போட்டி அவருக்கு மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கும் சூழலில் பல கிரிக்கெட் பிரபலங்கள் இப்போதிலிருந்தே அவரை பாராட்டி பல்வேறு கருத்துகளையும் தெரிவித்து வர ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை இந்திய அணிக்காக எடுத்த கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின் இந்த போட்டியில் முறியடித்து நம்பர் ஒன் இந்திய இந்திய பவுலராக மாறவும் வாய்ப்புள்ளது.

இதனால் மக்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரின் ஆதரவால் இந்த சாதனையை நிச்சயம் அஸ்வின் செய்து காட்டுவார் என்றும் ரசிகர்கள் சூளுரைத்து வருகின்றனர். பவுலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பிய அஸ்வின், பல போட்டிகளில் நேர்த்தியாக ஆடி இந்திய அணியை மீட்டெடுத்துள்ளது எந்த காலத்திலும் மறக்க முடியாது.

- Advertisement 2-

அப்படி கடந்த 2021 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில், இந்திய அணி தோல்வி பெறும் நிலையில் இருந்த போது ரவிச்சந்திரன் அஸ்வினும், ஹனுமா விஹாரியும் மிக நிதானமாக ஆடி போட்டியை டிரா செய்திருந்தனர்.

இந்த போட்டி பற்றி தான் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரர் புஜாரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “அஸ்வின் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். 2021 ஆம் ஆண்டு சேப்பாக்கில் அவர் போட்டியை வென்று கொடுக்கும் அளவுக்கான பேட்டிங்கை யாராலும் மறந்து விட முடியாது.

ஆனால் அதே 2021 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் அவர் முதுகு வலியுடன் ஆடி இருந்தது இன்னும் நீண்ட காலங்களுக்கு பேசப்படும். ஐந்தாவது நாளில் இந்தியாவை டிராவை நோக்க போன போது எனக்கு பதிலாக பேட்டிங்கில் அஸ்வின் களமிறங்கி இருந்தார். அந்த போட்டியில் முதுகு வலியுடன் அவர் தோல்வியை நினைத்து வருத்தப்பட வேண்டாம் என என்னிடம் கூறியது இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது.

முதுகு வலி அதிகமாக இருக்கும் போது பவுன்சர் போன்ற பந்துகளை விடுவதே சற்று கடினமான ஒன்றுதான். அதே போல சில நேரங்களில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஆடுவதும் சவாலான விஷயம். ஆனால் இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகள் எல்லாம் தாண்டி அஸ்வினும் தசை பிடிப்பால் அவதிப்பட்ட ஹனுமா விஹாரியையும் சேர்த்து இந்திய அணியை காப்பாற்றி இருந்தனர்” என அஸ்வின் கூறியுள்ளார்.

சற்று முன்