- Advertisement 3-
Homeவிளையாட்டுஹாஸ்பிடலில் அஸ்வினின் தாய்.. சத்தமே இல்லாமல் புஜாரா செய்த பெரிய உதவி.. மனுஷன் நிஜமாவே வேற...

ஹாஸ்பிடலில் அஸ்வினின் தாய்.. சத்தமே இல்லாமல் புஜாரா செய்த பெரிய உதவி.. மனுஷன் நிஜமாவே வேற லெவல்..

- Advertisement 1-

ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500-வது விக்கெட்டை எடுத்த அதே சமயத்தில் மிகப்பெரிய ஒரு துயரமும் அவரை தேடி வந்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 500 விக்கெட்டுகளை தொட்டிருந்த அஸ்வின் திடீரென போட்டியின் பாதியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அவரது தாய் நினைவில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனால் போட்டியின் பாதியில் இருந்து அவர் விலகி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

மிக முக்கியமான சாதனையை ஒருவர் தொட்ட சமயத்தில் இப்படி ஒரு செய்தி வந்து சேர வேண்டுமா என ரசிகர்களே ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். தொடர்ந்து சென்னை திரும்பி இருந்த அஸ்வின், பிசிசிஐ உதவியுடன் தனி ஹெலிகாப்டரில் அதே டெஸ்டின் நான்காவது நாளில் இந்திய அணியில் இணைந்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்ததும் ரசிகர்கள் மத்தியில் அவரது அர்ப்பணிப்பை எண்ணி வியந்து பார்க்கவும் வைத்திருந்தது.

அப்படி ஒரு சூழலில் அந்த சமயத்தில் இந்திய அணியின் முன்னணி வீரரான புஜாரா அஸ்வின் குடும்பத்திற்கு செய்த உதவி பற்றி அஸ்வினின் மனைவியான ப்ரீத்தி நாராயணன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “அஸ்வின் ராஜ்கோட் டெஸ்டில் ஆடிக் கொண்டிருந்த போது எனது மாமியார் திடீரென மயங்கி விழுந்து விட்டார். அவரை மருத்துவமனையில் நாங்கள் அனுமதித்திருந்தோம். டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருந்ததால் அஸ்வினுக்கு அவரது தாயின் உடல்நிலை பற்றி எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்றும் முடிவு எடுத்தோம்.

ராஜ்கோட்டில் இருந்து சென்னை வருவதற்கு விமானங்கள் நேராக இல்லை என்பதாலும் நாங்கள் அவரிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. இதனால் நாங்கள் புஜாராவின் உதவியை நாடும் நிலை அமைந்தது. புஜாராவும் அவரது மனைவியும் தான் ராஜ்கோட்டில் இருந்து எப்படி வேகமாக சென்னைக்கு அஸ்வின் வந்து சேர முடியும் என்ற விமான வழித்தடத்தையும் எங்களுக்காக கண்டறிந்து சொன்னார்கள்.

- Advertisement 2-

அதன் பின்னர் தான் அஸ்வினிடம் நடந்ததை பற்றி கூற அவர் உடனடியாக இங்கே வந்து சேர்ந்தார். முன்னதாக அஸ்வினிடம் ஃபோனில் விஷயத்தை கூறியதுமே அவர் உடைந்து சில நிமிடங்கள் பேசாமல் இருந்தார். அப்படி ஒரு இக்கட்டான நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் வசதிகளை செய்து கொடுத்த பிசிசிஐக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்