- Advertisement -
Homeகிரிக்கெட்பந்து என்னமோ ஒரே மாதிரி தான். ஆனா விக்கெட் மட்டும் ரெண்டு. இத ரீபிலே பண்ணி...

பந்து என்னமோ ஒரே மாதிரி தான். ஆனா விக்கெட் மட்டும் ரெண்டு. இத ரீபிலே பண்ணி பாத்தா புஜராவே கோவப்பட வாய்ப்பிருக்கு

-Advertisement-

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 7-ஆம் தேதி துவங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா தங்களது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

அதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று மூன்றாம் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது தற்போது இந்திய அணியை பின்னடைவிற்கு தள்ளி உள்ளது என்றே கூறலாம்.

ஏனெனில் இந்தியாவில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து இந்திய அணி நேரடியாக இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளதால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

-Advertisement-

அதிலும் குறிப்பாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 15 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்காட் போலந்து வீசிய பந்தை கணிக்க தவறி கிளீன் போல்ட்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் கேமரூன் கிரீன் வீசிய புல் லென்த் பந்தை தடுக்காமல் விட்ட புஜாராவும் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றம் அளித்தார். இப்படி இருவரும் ஒரே மாதிரி பந்தில் ஆட்டம் இழந்தது அனைவரது மத்தியிலும் விமர்சிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக புஜாரா ஆட்டமிழந்த விதம் குறித்து பேசிய ஹர்ஷா போக்ளே : புஜாரா ஆட்டமிழந்த முறையை அவரே பார்த்தால் மிகவும் ஏமாற்றம் அடைவார் என்று தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்