Homeகிரிக்கெட்அக்தரே வந்து அதிவேகத்துல போட்டாலும் அடி கன்பார்ம்... கொஞ்சம் மிஸ் ஆனா சிக்ஸ் தான் பாத்துக்கோங்க...

அக்தரே வந்து அதிவேகத்துல போட்டாலும் அடி கன்பார்ம்… கொஞ்சம் மிஸ் ஆனா சிக்ஸ் தான் பாத்துக்கோங்க – தினேஷ் கார்த்திக் பேச்சு

-Advertisement-

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்துல் 90 பந்துகள் மீதம் வைத்து அபார வெற்றியை பெற்றது. அதற்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அபார ஆட்டமே காரணம். 84 பந்துகளில் 131 ரன்கள் விளாசி ஏராளமான சாதனைகளை படைத்தார். குறிப்பாக கிறிஸ் கெய்ல் வசம் இருந்த அதிக சிக்சர்கள் சாதனையை முறியடித்தார்.

அதேபோல் ரோகித் சர்மா அடித்த சிக்ஸர்கள் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. புல் ஷாட்டில் ரோகித் சர்மா லெத் திசையில் அடித்த சிக்சர்கள் வேற லெவலில் இருந்தது. அதேபோல் ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கும், நெட் ரன் ரேட்டிலும் முன்னிலை பேறுவதற்கும் உதவியாக அமைந்தது.

-Advertisement-

இதுகுறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசும் போது, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் புல் ஷாட் மூலமாக மட்டுமே அடிக்கப்பட்டிருக்கும். அதுதான் ரோகித் சர்மாவின் ஷாட். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் புல் ஷாட்டிற்கு பதிலாக ரோகித் சர்மா ஷாட் என்றே அழைக்க வேண்டும். அந்த ஷாட் அவ்வளவு கிளாசிக்க்காக உள்ளது.

வெறும் 135 முதல் 140 வேகத்தில் வீசும் பவுலர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அக்தர் போல் 150 வேகத்தில் வீசினாலும் ரோகித் சர்மாவால் புல் ஷாட் அடித்து சிக்ஸ் அடிக்க முடியும். சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் வீரர் 44 இன்னிங்ஸ் விளையாடி 6 சதங்களை அடித்துள்ளார். ஆனால் அதனை வெறும் 19 இன்னிங்ச்களில் முறியடித்துள்ளார் ரோகித் சர்மா.

-Advertisement-

ரோகித் சர்மாவுக்கு சதங்களை விளாசுவதை விடவும் ஸ்ட்ரைக் ரேட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் புல் ஷாட் புலி என்று பட்ட பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். அதேபோல் ரிக்கி பாண்டிங்கை விடவும் ரோகித் சர்மா புல் ஷாட்டில் கூடுதல் கவனத்துடன் விளையாடி வருகிறார்.

ரோகித் சர்மா அடித்த சிக்சர்களில் பெரும்பாலான சிக்சர்கள் புல் ஷாட் மூலமாக அடிக்கப்பட்டது தான். இடுப்புக்கு மேல் பந்து கொஞ்சம் மேல் எழுந்து வந்தாலும், ரோகித் சர்மா நேராக புல் ஷாட்டை விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்