- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனியின் 18 வருட சாதனை, சச்சினின் 21 வயது சாதனை எல்லாத்தையும் காலி செய்த ஆப்கானிஸ்தான்...

தோனியின் 18 வருட சாதனை, சச்சினின் 21 வயது சாதனை எல்லாத்தையும் காலி செய்த ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ்

- Advertisement-

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள
நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் மூன்று போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் மோதி வருகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபாரமாக வென்ற நிலையில் இரண்டாவது போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டாவில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் குர்பாஸ் 151 ரன்கள்களும், இப்ராஹிம் சட்ரான் 80 ரன்களையும் விலாசி சிறப்பான தொடக்கத்தை அணிக்கு அமைத்துக் கொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை எடுத்தது.

- Advertisements -

பின்னர் 50 ஓவருக்கு 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான அணி களமிறங்கியது. அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் பகர் ஜாமான் 30 ரன்களும், இமாம் 91 ரங்களையும் குவித்து நல்லதொரு தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்பு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி துல்லியமாக பந்து வீச மற்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். ஆனால் சதாப் கான் நிலையாக நின்று 48 ரன்களை குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் 301 ரன்களை 49.5 ஒவர்களில் குவித்து வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட சதாப்கான் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement-

ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்ட போதும் அதனால் வெற்றிக்கனியை எட்ட முடியவில்லை. குறிப்பாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் அடித்த 151 ரன்கள் பயனற்று போனது. இருந்தபோதும் குர்பாஸ் இந்த போட்டியில் பல சாதனைகளை செய்துள்ளார். 21 வயதான குர்பாஸ், இதுவரை மொத்தம் ஆடியுள்ள 23 இன்னிங்சில் 5 சதங்களை குவித்துள்ளார். இதன் மூலம் அவர் சச்சினின் சாதனையை முறியடித்துளளார்.

காட் ஆப் கிரிக்கெட் என அனைவராலும் போற்றப்படும் லிட்டில் மாஸ்டர் சச்சின், 21 வயதில் நான்கு சதங்களை மட்டுமே விலாசியுள்ளார். ஆனால் குர்பாஸ் 21 வயதில் 5 சதங்களை அடித்ததன் மூலம் உலக அரங்கில் தனது இருப்பை பதிவு செய்துள்ளார். அதே போல 18 வருதங்களாக தோனி தக்கவைத்திருந்த சாதனையையும் குர்பாஸ் முறியடித்துளளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு, பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் தோனி 148 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த அதிகபட்ச ஸ்கோராக இது இருந்தது. ஆனால் தற்போது குர்பாஸ் 151 ரன்கள் அடித்து அதையும் முறியடித்துளளார்.

சற்று முன்