- Advertisement -
Homeவிளையாட்டுதோனி இடத்தை பந்த் நிரப்புனது இப்படித்தான்.. நான் அசந்து பார்த்த விஷயம்.. ரகசியம் உடைக்கும் டிராவிட்..

தோனி இடத்தை பந்த் நிரப்புனது இப்படித்தான்.. நான் அசந்து பார்த்த விஷயம்.. ரகசியம் உடைக்கும் டிராவிட்..

- Advertisement-

கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் ஒரு அணியின் பந்து வீச்சாளரோ, பேட்ஸ்மேனோ தனியாளாக போட்டியை மாற்றும் போது அவர் ஓய்வு பெற்று விட்டால் அந்த இடத்தை யார் நிரப்புவார் என்று அச்சம் ரசிகர்கள் மத்தியில் இருக்கும். உதாரணத்திற்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக தோனி செயல்பட்ட சமயத்தில் அவரது ஓய்வு காலத்தை எட்டிய போது ரசிகர்களுக்கு அதிக பதற்றம் இருந்தது.

இந்திய அணியில் நிறைய விக்கெட் கீப்பர்கள் இருந்தாலும் தோனியை போல பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் அபாரமாக செயல்படக்கூடிய வீரர்கள் அரிதாகவே இருந்தனர். அந்த சமயத்தில் தான் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இந்திய அணிக்காக அறிமுகமாகி பல போட்டிகள் ஆடி வந்தார். அவரும் ஆரம்பத்தில் கீப்பிங்கில் சில தடுமாற்றங்களை மேற்கொண்டு இருந்ததால் தோனியின் இடத்தை நிச்சயம் அவரால் நிரப்ப முடியாது என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர்.

ஆனால் தற்போது டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என அனைத்து வடிவிலும் இந்திய அணியின் தூணாக மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இருந்து வரும் ரிஷப் பந்த், ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற வரலாற்று சாதனையும் படைத்திருந்தார். அது மட்டுமில்லாமல் காயத்திலிருந்து இவ்வளவு வேகமாக குணமடைந்து மீண்டும் அனைத்து வடிவிலும் கவனம் செலுத்தி பட்டையைக் கிளப்புவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டில் ஆடினாலும் டெஸ்ட் போட்டியில் அவர் கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே சதமடித்திருந்தது அனைவரையும் அசர வைத்திருந்தது. நீண்ட நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஃபிட்டுடன் இருக்க வேண்டும் என்றால் மிக கடினமாக தயாராக வேண்டும். ஆனால் அதையெல்லாம் சிரமத்திற்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செய்த ரிஷப் பந்த், ஆஸ்திரேலிய மண்ணிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement-

சேனா நாடுகளில் எந்த இந்திய விக்கெட் கீப்பரும் டெஸ்ட் சதமடிக்காத நிலையில் அதனை 4 முறை கடந்துள்ள ரிஷப் பந்த், தோனியையே மிஞ்சி விட்டார் என பலரும் பாராட்டி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், ரிஷப் பந்த் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பந்த்தின் கம்பேக் பற்றி ஆச்சரியமாக பேசும் டிராவிட், “எப்படிப்பட்ட ஸ்பெஷலான கிரிக்கெட் வீரர் அவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக சர்வ சாதாரணமாக கம்பேக் கொடுத்தது அபாரமாக இருந்தது. தோனி ஓய்வை அறிவித்த போது அவரது இடத்தை ஒருவர் நிரப்புவதற்கு நீண்ட காலமாகும் என தோன்றியது. தோனியை ரிஷப் பந்த் மிஞ்சி விட்டார் என நான் சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக டெஸ்ட் போட்டிகளில் பந்த்தின் ஆட்டம் அசத்தலாக தான் அமைந்துள்ளது” என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

சற்று முன்