- Advertisement 3-
Homeவிளையாட்டுஉடைஞ்சு போயிருந்த கோலி.. ஓடி வந்து கோச்சா ராகுல் டிராவிட் செஞ்ச விஷயம்.. எமோஷனல் பின்னணி..

உடைஞ்சு போயிருந்த கோலி.. ஓடி வந்து கோச்சா ராகுல் டிராவிட் செஞ்ச விஷயம்.. எமோஷனல் பின்னணி..

- Advertisement 1-

இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை பழிக்கு பழி வாங்கி, 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளது. இன்னும் ஒரே ஒரு வெற்றியை பெற்று விட்டால் 11 ஆண்டுகள் கழித்து ஒரு ஐசிசி கோப்பையை சொந்தமாக்கி விடலாம் என்ற சூழலில் அதற்காக தான் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.

ஆனால், இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்து வரும் விராட் கோலிக்கு இந்த டி20 உலக கோப்பை ராசியானதாக அமையவில்லை என்பதே உண்மை. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 22 வரை ஒரு சதம் கூட அடிக்காமல் கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த விராட் கோலி, அந்த விமர்சனங்கள் அனைத்தையும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை மூலம் அடித்து நொறுக்கி இருந்தார்.

அப்போது முதல் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர் வரைக்கும் தனது பேட்டிங் மூலம் அசைக்க முடியாத இடத்தையும் பிடித்திருந்தார் கோலி. இப்படி தொடர்ச்சியாக பல ஐசிசி தொடர்களில் நிறைய ரன்களை குவித்து வந்த விராட் கோலியால் இந்த டி20 உலக கோப்பை தொடரில் ரன் சேர்க்க முடியவில்லை. ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக கோலி ஆடி வந்தாலும் இந்திய அணிக்காக மூன்றாவது வீரராக இறங்கி தான் நிறைய ரன்களை சேர்த்துள்ளார்.

அப்படி இருந்தும் இந்த டி20 உலக கோப்பையில் தொடர்ந்து விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவதுடன் ஆரம்பத்திலே அடித்து ரன் சேர்க்க வேண்டும் என்று நெருக்கடியும் அவருக்கு உள்ளது. இப்படி பல விஷயங்கள் விராட் கோலிக்கு சாதகமாக அமையாமல் போக 7 போட்டிகளில் ஆடி 75 ரன்கள் தான் எடுத்துள்ளார். அதிலும் இரண்டு முறை மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்துள்ளார்.

- Advertisement 2-

மூன்று லீக் போட்டிகளில் அவர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான போதே அனைவரும் அவர் மூன்றாவது வீரராக களம் இறங்குவது தான் சிறப்பான முடிவாக இருக்கும் என்றும் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோர் அந்த முடிவை எடுக்காமல் தொடர்ந்து கோலியை தொடக்க வீரராக களமிறக்க அதன் மூலம் எந்த பலனும் இல்லாமல் போனது.

அந்த வகையில் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதியிலும் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 ரன்கள் எடுத்து கோலி அவுட்டானது ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருந்தது. முன்னரே கூறியது போல மூன்றாவது வீரராக இறங்கி இருந்தால் நிச்சயம் பலம் கிடைத்திருக்கும் என்றும் இப்படி தொடக்க வீரராக களம் இறக்கியதால் தான் அவரால் ரன் சேர்க்க முடியாமல் போகிறது என்றும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோலி அவுட்டாகி வெளியேறியதும் பெவிலியனில் இருந்த அவரை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேற்றியது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

தன்னால் இந்திய அணிக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்ற வேதனையுடன் கோலி அங்கே இருக்க அவர் அருகே சென்ற ராகுல் டிராவிட் எதையோ பேசிக் கொண்டிருந்ததுடன் மட்டுமில்லாமல் தட்டிக் கொடுத்து தேற்றவும் செய்திருந்தார். நிச்சயம் தனது தவறுகளை திருத்திக் கொண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இறுதி போட்டியில் பட்டையை கிளப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்