- Advertisement 3-
Homeவிளையாட்டுஅதுக்காகவே இந்தியா உலக கோப்பைய ஜெயிக்கக் கூடாது.. ரசிகர்கள் விரும்பியும் ஸ்ட்ரிக்ட்டாக மறுத்த டிராவிட்..

அதுக்காகவே இந்தியா உலக கோப்பைய ஜெயிக்கக் கூடாது.. ரசிகர்கள் விரும்பியும் ஸ்ட்ரிக்ட்டாக மறுத்த டிராவிட்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பார்படாஸ் மைதானத்தில் டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியை ஆடவுள்ள நிலையில், ஒரே ஒரு ஜாம்பவானுக்காக இதனை நிச்சயம் அவர்கள் வெல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்து கேப்டனாகவும் அணியை வழிநடத்தி வந்தவர் ராகுல் டிராவிட்.

இவர் ஆடிய பல டெஸ்ட் இன்னிங்ஸ்கள் இன்று கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் வீரர்களுக்கும் சிறந்த ஒரு புத்தகமாக இருக்கும் சூழலில் அவரது தலைமையில் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையில் படுதோல்வி அடைந்திருந்தது. லீக் சுற்றில் வங்காளதேச அணிக்கு எதிரான தோல்வியால் அத்துடன் நடையைக்கட்ட வேண்டிய நிலை சச்சின், கங்குலி, தோனி, டிராவிட் உள்ளிட்ட பலர் இருந்த இந்திய அணிக்கு உருவாகி இருந்தது.

அந்த சமயத்தில் ராகுல் டிராவிட்டின் கேப்டன்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கடும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சந்திக்க அந்த சமயமே இந்திய கிரிக்கெட் சுற்றி சர்ச்சையான கருத்துக்கள் தான் உருவாகியிருந்தது. இதன் பின்னர் சில ஆண்டுகள் ஆடிய ராகுல் டிராவிட், கேப்டன் பதவியையும் திறந்திருந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.

அவர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி பல தொடர்களில் வெற்றிகளை குவிக்க முக்கிய காரணமாக இருந்து வரும் ராகுல் டிராவிட், இந்த டி20 உலக கோப்பை தொடருடன் தனது பதவி காலத்தையும் முடிக்க உள்ளார். மேலும் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியில் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் அவருக்கு மிகச்சிறந்த ஒரு வழியனுப்புதலை இந்திய வீரர்கள் செய்ய வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement 2-

டி20 உலக கோப்பையை கைப்பற்றி டிராவிட்டிற்கு சமர்ப்பிப்பதை விட அவருக்கு சிறந்த ஃபேர்வெல் இருக்காது என்பதும் பலரின் கருத்தாக உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையில் தான் அவர்கள் லீக் சுற்றிலேயே பரிதாபமாக தோல்வியடைந்து வெளியேறி இருந்தார்கள்.

இதனால் அதே வெஸ்ட் இண்டீஸில் வைத்து இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று அவர் கையில் கொடுத்து அழகு பார்க்கும் காட்சியையும் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர். இதன் காரணமாக, “Do It For Dravid” என்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாக இருந்து வருகிறது.

அப்படி ஒரு சூழலில் தனக்காக டி20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை பற்றி டிராவிட் தெரிவித்த கருத்து தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. ஒரே ஒரு நபருக்காக கோப்பையை கைப்பற்ற நினைப்பதை விட ஒட்டுமொத்த அணிக்காகவும், தாங்கள் ஆடும் கிரிக்கெட்டிற்காகவும் கோப்பையை வெல்வது தான் சிறந்ததாக இருக்கும் என்று கூறி உள்ளார்.

மேலும், தனக்காக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கை தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ள டிராவிட், தான் நம்பும் விஷயத்திலும், தான் துணை நிற்கும் விஷயத்தில் இருந்து எதிராகவும் அவை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்