- Advertisement 3-
Homeவிளையாட்டு20 வருஷ தவம்.. கோலி உலக கோப்பையை கையில் கொடுத்ததும்.. ராகுல் டிராவிட் செஞ்ச விஷயம்..

20 வருஷ தவம்.. கோலி உலக கோப்பையை கையில் கொடுத்ததும்.. ராகுல் டிராவிட் செஞ்ச விஷயம்..

- Advertisement 1-

ரோஹித் ஷர்மா இந்திய அணிக்காக டி20 உலக கோப்பைத் தொடரில் 2007 ஆம் ஆண்டு அடி இருந்த போது அவர்கள் கோப்பையை கைப்பற்றி இருந்தனர். அதேபோல விராட் கோலி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த போது இந்தியா கோப்பையை கைப்பற்றி இருந்தது. இப்படி இந்த இரண்டு வீரர்களும் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம் பிடித்திருந்தாலும் அவர்கள் முன்னணி வீரர்களாக மாறிய பின்னர் எந்த உலகக் கோப்பை தொடரையும் வெல்ல முடியாத ஒரு சூழல்தான் இருந்து வந்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் சென்று பல கிரிக்கெட் தொடர்களை வென்று சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐசிசி கோப்பை மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பையின் இறுதி போட்டிகளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தவற விட்டிருந்தது.

இதனால் ரோஹித், கோலி ஆகியோரை சுற்றி கடுமையான நெருக்கடி உருவாக, அதனை தற்போது டி20 உலக கோப்பையை சொந்தமாக்கி கலங்கி இருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்துள்ளனர். அரையிறுதி போட்டியில் இந்திய அணி தடுமாறிய போது கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தார். அப்போது விராட் கோலியின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லாமல் இருக்க இறுதி போட்டியில் அவர் எப்படி ஆடுவார் என்று குழப்பம்தான் இருந்தது.

ஆனால் ரோஹித், ரிஷப் பந்த், சூர்யகுமார் ஆகியோர் சொற்ப ரன்களில் இறுதி போட்டியில் அவுட்டாகி போக, தனியாளாக போட்டியை மாற்றி இருந்தார் விராட் கோலி. அவர் அடித்த 76 ரன்கள் இன்னும் பல நாட்களுக்கு நிலைத்து நிற்கப் போகும் இன்னிங்ஸ்காக மாறிய சூழலில், இந்திய அணி வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்திருந்தார். பின்னர் ஆடிய தென்னாபிரிக்க அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்தாலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அசத்தலான பெர்ஃபாமன்ஸ் வெளிப்படுத்தி ஏழு ரன்களில் வெற்றியை பெற உதவி செய்திருந்தனர்.

- Advertisement 2-

அத்துடன் டி20 உலக கோப்பையை 17 ஆண்டுகள் கழித்தும் இந்திய அணி வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோரின் பங்கும் மிகப்பெரிதாக இருக்க, அதற்கு நிகராக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இந்திய அணியை சிறப்பாக தயார் செய்திருந்தார். இந்திய அணி கண்ட மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான ராகுல் டிராவிட்டால் எந்த உலக கோப்பையும் வெல்ல முடியாமல் ஓய்வினை அறிவித்திருந்தார்.

இதனிடையே, இந்த இறுதி போட்டிக்கு முன்பாகவே ராகுல் டிராவிட்டிற்காக கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்த தருணமும் நிஜமாகி உள்ளது. அப்படி ஒரு சூழலில், கோப்பையை வென்ற பின்னர் கோழி அதனை ராகுல் டிராவிட் கையில் கொடுத்ததும் அவர் செய்த கொண்டாட்டங்கள் தான் தற்போது பலரையும் மனமுருக வைத்துள்ளது.

பொதுவாக டிராவிட் எப்போதுமே மிக அமைதியான நபராக தான் நாம் அனைவருமே பார்த்திருப்போம். ஆனால் கோலி, டி20 உலக கோப்பையை அவர் கையில் கொண்டு கொடுத்ததுமே ஏதோ ஒரு குழந்தையை போல அதனை வாங்கிக் கொண்டு மிக உற்சாகமாக கொண்டாடி தீர்த்திருந்தார் ராகுல் டிராவிட். 20 ஆண்டுகளாக அவர் காத்திருந்ததற்கான பலன் கிடைத்துள்ள நிலையில் அனைவருமே அதனை மிக பெருமையாக தான் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்